Share

Jan 10, 2018

ஆண்டாளே


ஹெச். ராஜாவின் கலாச்சார போலீஸ்தனம்.


We have an awful time to be alive.

பி.ஜே.பி mindset வெளிப்படையாக Sex workerக்கு எதிரானது.
விளிம்பு நிலை மனிதர்களை கொண்டாடும் மனநிலை கிடையாது.
கெட்டார் தம் வாயில் எளிதில் கிளைத்து விடும். பட்டார் தம் நெஞ்சை விட்டு பல நாள் அகலாது.

கண்ணன் தூது வந்த போது விதுரன் வீட்டில் தங்கினான் என்பதற்காக துரியோதனன் கொந்தளித்து “ protocol தெரியாதா? நீ எப்படி உன் வீட்டில் கண்ணனை  உபசரிக்கலாம். சக்கரவர்த்தியாகிய என் வீட்டில் தானே கிருஷ்ணன் சாப்பிட வேண்டும்? தேவடியாள் மகனே “ எனும்போது விதுரன் தன் வில்லை முறித்துப்போடுகிறான். திட்டமிட்டு அரசியல் செய்து விதுரன் குடிசைக்கு போய் அதிதி நாடகமாடிய கல் நெஞ்சக்காரன் கண்ணனே உடைந்து போய் விதுரனை “தாசி மகன்” என்று துரியோதனன் சொன்னதற்காக கண்ணீர் விடுகிறான்.
பி.ஜே.பிக்காரர்களும், வைரமுத்துவும்  “ நதிமூலம், ரிஷிமூலம் பார்க்கக்கூடாது” என்பதை சௌகரியமாக மறக்கிறார்கள். Proud people breed sad sorrows.
ஒரு இஸ்லாமியக் கவி பாடினாள் ‘தேவடியாள் என் தாயாக வேண்டும். நான் தேவடியாள் வீட்டு நாயாக வேண்டும்’ என்று!
எப்பேர்ப்பட்ட உன்னத மனநிலை!
 இவர்கள் இகழும் இஸ்லாத்திலிருந்து இப்படியும் ஒரு குரல் வந்துள்ளது.


சீதா, சீதா என்று மீண்டும் மீண்டும் சொல்லும்போது தாசி என்று மாறும்.
தாசி, தாசீ எனும் போது சீதா என்று ஒலிக்கும்.
தமிழில் ஆண்டாள் தான் first ever feminist. Women liberator.
இந்த விஷயங்களெல்லாம் நிச்சயமாக ஹெச்.ராஜாவுக்கும் பி.ஜே.பிக்கும் சிலாக்கியமானதல்ல.

’என் தடமுலைகள் மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்’ என்றவள் ஆண்டாள்.
”இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்.” குறியீடாக பெண்ணினத்தை தட்டி எழுப்பியவள்.
திருப்பாவை படித்தாலும், பாடக்கேட்டாலும் சிலிர்க்கும்.
ஆண்டாள் எப்பேர்ப்பட்ட மகத்தான கவிஞர்!
Literature will take over the function of religion in the future.

தெய்வ நம்பிக்கை இப்போது இல்லையென்றாலும் எந்த அதிர்ச்சி ஏற்பட்டாலும் என் வாயில் உடனே
“ஆண்டாளே, ரங்கமன்னாரே” என்ற வார்த்தைகள் வரும்.
தொட்டில் பழக்கம். நான் சாகும்போது கூட அனிச்சையாக “ஆண்டாளே” என்று சொல்லி உயிர் விட நேரலாம்.

……………………………..












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.