Share

Jul 25, 2017

Pigs in Bigg boss


கலாச்சார போலீஸ் லட்சுமி ராமகிருஷ்ணனையே பல்லை கடித்துக்கொண்டு ignore செய்த என்னால் காயத்ரி, ஜூலியை சகிக்கவே முடியவில்லை.

 ஜூலி 'ஆண்டவர் சோதிப்பார். கைவிட மாட்டார்' என்பது ஆழ்வார் பேட்டை ஆண்டவர் கமலை அல்ல. 
ஏசு ஆண்டவரைத் தான். கிறிஸ்துவ cliche இது!

சினேகன் எனும் அற்ப போலியின் ஆர்ப்பாட்டம் கண் கொண்டு காண முடியவில்லை. கட்டி, கட்டி,கட்டி பிடிச்ச்ச்’சீ’ உள்ள விட்டு ஆழம் பாத்திருவான் போல இருக்கு. இடுப்புக்கு கீழ எட்டு சுத்து பின்னி படந்திருவான் போலயே!
சனியன்! தும்பிக்கய ஊனி நாலு காலயும் தூக்கி சங்கு சக்கரமா சுத்தி ஜனங்கள பரவசப்படுத்துற பிரமையில இருக்கான்.


சக்தி யாரு? காயத்ரியோட puppet.


வல்லூறுகளுக்கிடையே வெண்புறா ஓவியா.


http://rprajanayahem.blogspot.com/2017/07/blog-post_11.html



Jul 19, 2017

சில


ஒரு பெரியவர். பார்ப்பதற்கே பச்சாத்தாபம் தோன்றும்படி இருப்பார். கவனிக்கப்படாத குழந்தையின் கலவரத்தையும், திகிலையும் அவருடைய முகத்தில் காணமுடியும். ஏழையல்ல. ஆனால் பிள்ளைகள் அன்பு பூரணமாய் கிடைக்கப்பெற்றவர் அல்ல. மனைவியுடன் இணக்கம் சிலாக்கியமாய் இல்லை. முதுமையில் பலருக்கும் ஏற்படும் நிலை தான்.
எப்போதும் ந.முத்துசாமி சாரை பார்த்து கோவில் கோபுரத்திற்கு கும்பிடு போடுவது போல கையுயர்த்தி வணங்குவார்.

அவரை நான் எதிர்கொள்ள நேரும்போது வணக்கம் சொல்வதுண்டு.
இன்று நின்று பேசினேன்.
அவர் ஏனோ  ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்.
”சாகக்கிடக்கிறவனுக்கு கூட பச்சத்தண்ணி கொடுக்காதீங்க. தண்ணி கொடுத்தீங்கன்னா ’ஓத்தா! ஏண்டா ஒரு குவார்ட்டர வாயில ஊத்தாம வெறும் தண்ணிய ஊத்துற’ன்னு கேப்பான்.”

இந்த ’ஓத்தா’ என்ற வார்த்தை சென்னையில் நிமிஷத்துக்கு நிமிஷம் காதில் விழுகிற வார்த்தை.

இது பற்றி ஓவியர் மு. நடேஷ் சொன்னார் “ இங்க ‘ஓத்தா’ என்பது Fuck off. ஓத்தா என்பதன் அர்த்தம் Fuck off தான்.”

நான் இவ்வளவு நாளும் mummy, mother ன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன்!
…………………………………….

எவ்வளவு பெரிய பதவி டி.ஜி.பி. கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயணா சிறை சீர்கேட்டில் டி.ஐ.ஜி ரூபா கிளப்பிய புயலுக்கு எதிர் வினையாற்றும் போது அவருடைய கண்கள் பாவம் கிடந்து அல்லாடியது. பொய் பேசுவது சிரமமானது.

மன்னார்குடியார்கள் பணத்தை வைத்து என்னவெல்லாம் சர்க்கஸ் நடத்துகிறார்கள். பரப்பண அக்ரஹார சிறையை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள். புனிதமான பொது வாழ்வு!
…………………………

கமல் ஹாசன் மிக திட்டமிட்டு எதையும் செய்பவர். அரசியலில் இறங்கும் பட்சத்தில் அவரை எதிர்கொள்வது மிக கடினம். பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வியாதிகள் நிலை பாவம் தான். தாங்க முடியாது சிரமப்படுவார்கள்.

................

பிக் பாஸ் ஆண்களுக்கு Home sick ! கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ் இருவரும் தான் (இது வரை) அழவில்லை என நினைக்கிறேன். பிக் பாஸ் பெண்களுக்கு ஏன் இந்த sickness இல்லை?
…………………………………………….

Jul 13, 2017

A Ferocious Politician


எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து விலக்கப்பட்ட போது அவருடன் என் மாமனார் இணைந்தவர். கட்சி ஆரம்பிக்கு முன்னர் தாமரைக்கொடியை ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்றியவர். எம்.ஜி.ஆர் கட்சிக்கு கொடி நிச்சயிக்கும் முன் தாமரை வரையப்பட்ட கொடி தான் அதிமுகவிற்கு தமிழகமெங்கும் கம்பத்தில் ஏற்றப்பட்டது.

தி.மு.க. அமைச்சர் மாதவன் என் மாமனாரை கட்சியை விட்டு எம்.ஜி.ஆருடன் செல்ல வேண்டாம் என்று எவ்வளவோ போனில் பேசிப்பார்த்தார். நடக்கவில்லை.


அ.தி.மு.கவை மேற்கு முகவை மாவட்டத்தில் வளர்ப்பதில் பெரும்பங்காற்றியவர் என்று கட்சிக்காரர்கள் சொல்வார்கள்.
தி.மு.க. ஆட்சியில் அன்று அதனால் பல சிக்கல்களை சந்தித்தவர்.

அதிமுகவில் வெறும்பயல்களெல்லாம் பெரும்பணக்காரர்கள் ஆன போது அந்தக்கால மதிப்பில் பல லட்சங்களை அரசியலில் தொலைத்தவர்.
He was a ferocious politician. 

தி.மு.கவில் இருந்த மதுரை பழக்கடை பாண்டியை ஸ்ரீவி கிருஷ்ணன் கோவில் அருகில் அதிமுகவினர் தாக்க முற்பட்ட போது காரில் இருந்த சிறுவன் இளஞ்செழியன் இறக்கும்படியானது.
பிரபலமான அந்த இளஞ்செழியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவரில் ஒருவர் என் மாமனார். இன்னொருவர் தாமரைக்கனி.
அப்போது தீப்பொறி ஆறுமுகம் இளஞ்செழியன் கொலை வழக்கு பற்றி ஆக்ரோஷமாக தமிழக தி.மு.க மேடையில் என் மாமனார் பெயரை குறிப்பிட்டு விவரித்து பேசுவதுண்டு.
முரசொலியில் என் மாமனார் புகைப்படம் போட்டு கடுமையாக தாக்கி எழுதப்பட்டது.
( பழக்கடை பாண்டி பின்னால் அதிமுகவிற்கு வந்து, மதுரையில் கொள்கை பரப்பு செயலாளர் ஜெயலலிதாவுக்கு சேலைகள் வாங்கிக் கொடுத்து, மேடையில் அநாகரீகமாக நடந்து கொண்டதனால், பின் ராமாவரம் தோட்டத்தில் அடி வெளுக்கப்பட்டது சுவாரசியமான தனி கதை )


1977ல் எம்.ஜி.ஆர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வேட்பாளராக என் மாமனாரை தேர்தலில் நிற்கச் செய்ய முடிவெடுத்த போது “என்னை இங்கே நிறுத்தினால் அதிமுக ஒரு தொகுதியை இழக்க நேரிடும் “ என்று சொல்லியிருக்கிறார்.
மம்சாபுரம் அறிவரசன் வேட்பாளராக கட்சியால் அறிவிக்கப்பட்ட போது அதை தடுத்து தாமரைக்கனியை வேட்பாளராக்கச் செய்தார்.

ஐந்தாம் முறையாக தாமரைக்கனி எம்.எல்.ஏ.வாக இருந்த போது ஒரு கூட்டத்தில் பேசிய போது சொன்னார் : ”நான் முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன போது ஒரு முறை என்னையும் சந்திரனையும் மௌண்ட் ரோட்டில் பார்க்க நேர்ந்த எம்.ஜி.ஆர்
“ சந்திரன்! அசெம்பிளிக்கு போகாம இங்க என்ன செய்றீங்க” என்று சந்திரனைப் பார்த்து கேட்டார். அப்ப சந்திரன் தான் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ என்று எம்.ஜி.ஆரே நினைத்துக்கொண்டிருந்தார். எஸ்.எம்.டி சந்திரன் போட்ட பிச்சை இந்த எம்.எல்.ஏ பதவி!”
.............................

1979ல் ஆளுங்கட்சிக்காரன் ஒருவனை கள்ளச்சாராய கேஸில் போலீஸ் அரெஸ்ட் செய்திருக்கிறது. அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷன்
சப் – இன்ஸ்பெக்டர் ரெங்கராஜன்.
கட்சிக்காரர்கள் என் மாமனாரிடம் வந்து முறையிட்டவுடன் இவர் ஸ்டேசனுக்கு வந்து எஸ்.ஐ யை பார்த்திருக்கிறார். அவர் விசாரித்து விட்டு அனுப்பி விடுவதாக சொல்லியிருக்கிறார். இவர் சமாதானமாகி ஸ்டேஷனை விட்டு இறங்கிய போது எம்.எல்.ஏ தாமரைக்கனி “ என்ன அண்ணாச்சி! விடமாட்டேன்றானா? வாங்க. அவன என்னன்னு கேப்போம்” என்று மீண்டும் ஸ்டேசனுக்குள் அழைத்திருக்கிறார்.

போனவுடன் விவாதம் முற்றியிருக்கிறது. எஸ்.ஐ பொறுமையிழந்து “ இப்ப கூட நான் சந்திரனை அரெஸ்ட் செய்ய முடியும். இளஞ்செழியன் கொலை வழக்குல வாரண்ட் இருக்கு.” என்று சொல்லியிருக்கிறார். என் மாமனாரின் கையைப் பற்றி பிடித்திருக்கிறார். உடனே தாமரைக்கனி ஓங்கி எஸ்.ஐயின் பிடறியில் அடித்திருக்கிறார். அடித்தவர் அங்கு நிற்கவில்லை. உடனே ஸ்டேஷனை விட்டு வெளியேறி விட்டார்.

என் மாமனாரும் எஸ்.ஐயும் போலீஸ் ஸ்டேஷனில் கட்டிப் புரண்டு சண்டை போட்டிருக்கிறார்கள்.
சட்டசபையில் அன்று விவாதப்பொருள் ஆன நிகழ்வு.

இது பற்றி அவருடைய டைரியில் எழுதியிருந்தார் : ”கைது செய்யப்பட்டு மதுரை சென்ட்ரல் ஜெயிலில் நான் அடைக்கப்பட்டேன். அங்கிருந்த கைதிகள் எல்லோரும் என்னை ’ஆளுங்கட்சிக்காரன் ஒருவன் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு வந்திருக்கிறானே!’ என்று அதிசயமாக பார்த்தார்கள்.”
…………………………..



நான் என் திருமணப் பத்திரிக்கையை கொடுக்க மதுரை நத்தம் ரோட்டில் இருந்த எஸ்.பி. ( நார்த் ஆஃபிஸ்) போயிருந்தேன். அங்கே என்னுடைய கல்லூரி வகுப்புத் தோழன் எஸ்.பி.யின் ஸ்பெஷல் ஆஃபிசராக இருந்தார். பட்டாபி. அவருடன் இன்னொரு ஸ்பெஷல் ஆஃபிசர். அவர் ரெங்கராஜன்!
ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் ஸ்டேசனில் என் மாமனாருடன் கை கலப்பில் ஈடுபட்ட எஸ்.ஐ. ரெங்கராஜன்.

பட்டாபிக்கு பத்திரிக்கை வைத்தேன். பட்டாபி பக்கத்தில் இருந்த ரெங்கராஜனிடம் சிரித்தவாறு சொன்னார்: “ எஸ்.எம்.டி.சந்திரன் மகளைத் தான் என் நண்பர் ராஜநாயஹம் மணம் புரிகிறார்.”
என்னுடைய திருமணம் நவம்பர் ஏழாம் தேதி.
பட்டாபி என்னிடம் ” நவம்பர் பதினாறாம் தேதி ரெங்கராஜனுக்கு திருமணம்!”

நான் ரெங்கராஜனுக்கு என் திருமணப் பத்திரிக்கையை கொடுத்தேன். அவர் தன்னுடைய திருமணப்பத்திரிக்கையை எனக்கு கொடுத்தார்.
கட்டாயம் திருமணத்திற்கு வரவேண்டும் என்று ரெங்கராஜன் என்னிடம் சொன்னார். நானும் என் திருமணத்திற்கு அவசியம் ரெங்கராஜன் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
இருவரும் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டோம். “ Wish you a happy married life!”

என் வகுப்புத் தோழன் பட்டாபி என் திருமணத்திற்கு வந்திருந்தார். ரெங்கராஜனால் வர முடியவில்லை. நானும் கூட அவர் திருமணத்தின் போது புது மாப்பிள்ளை என்பதால் போக முடியாமல் போய் விட்டது.

................................

https://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_11.html

https://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_23.html

http://rprajanayahem.blogspot.in/2017/05/blog-post_30.html

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_12.html

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…

https://rprajanayahem.blogspot.in/2012/11/blog-post_9.html

http://rprajanayahem.blogspot.in/2015/02/blog-post_7.html

https://rprajanayahem.blogspot.in/2017/01/cakewalk.html


Jul 11, 2017

பெயர்


எலியா கஸன் இயக்கி மார்லன் பிராண்டோ நடித்த ’ஆன் த வாட்டர்ஃப்ரண்ட்’ படத்தில் தொந்தரவான வில்லனாக நடித்திருந்த லீ ஜே .காப் பெயர் ஃப்ரண்ட்லி. Friendly!
கமல் ஹாசனின் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வில்லன் பெயர் சினேகன்.
குள்ள சினேகன்.

வில்லிகள் காயத்திரி, ஆர்த்தி, ஜூலி.
ஓலப் பாயில நாய் மோண்ட மாதிரி தொண தொணத்த கஞ்சா கருப்பு.
பரணி தான் பாவப்பட்ட ஜீவன்.

…………………………………….




அல்லயன்ஸ் ஃப்ரான்சைசில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பொற்கொடியை சந்தித்தேன்.

பெசண்ட் நகர் ஸ்பேஸஸில் அகமெம்னான் நாடகத்தில் க்ளிட்டெம்னெஸ்ட்ரா பாத்திரத்தில் இந்த பொற்கொடி நடிக்க பார்த்திருக்கிறேன். அவருடைய அப்பா பெயர் பாலறாவாயன் என்றார். பாலறாவாயன் என்ற பெயர் நான் நிஜமாகவே இதுவரை கேள்விப்படாதது.

 இளிச்சவாயன், ஓட்டவாயன், வாய் பொளந்தான் பலரைத் தெரியும்.

ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தர் பெயர் பாலறாவாயன்!

பொற்கொடியின் குடும்பமே சைவ சித்தாந்த ஈடுபாடு கொண்டது.
அப்பா பாலறாவாயன் லொயோலா கல்லூரியில் தமிழ் பேராசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் உபன்யாசம், வியாக்யானம் செய்வாராம்.
………………………

http://rprajanayahem.blogspot.in/2012/06/blog-post.html


http://rprajanayahem.blogspot.in/…/on-waterfront-1954movie.…

Jul 3, 2017

கலைவாணன் கண்ணதாசன்


சமீபத்தில் கூத்துப்பட்டறைக்கு கண்ணதாசனின் மகன் ஸ்ரீனிவாசன் வந்திருந்தார். அவருடைய மகன் பாரத். இவரை கூத்துப்பட்டறை மாணவராக சேர்ப்பதற்காக வந்திருந்தார். அக்ரிகல்சுரல் ஆஃபீசர் ஸ்ரீனிவாசன்.
கண்ணதாசன் தன் அண்ணன் ஏ.எல்.எஸ் பெயரை மகனுக்கு வைத்திருக்கிறார். ஸ்ரீனிவாசன், மகன் பாரத் இருவரையும் பார்த்த போது எனக்கு மறைந்த கலைவாணன் கண்ணதாசன் ஞாபகம் வந்தது.

ஏ.வி.எம் ஸ்டுடியோவில் எடிட்டர் கே.ஆர்.ராமலிங்கம் அவர்களின் எடிட்டிங் அறையில் கலைவாணனை சந்தித்திருக்கிறேன். அப்போது கலைவாணன் என்னைப்போலவே அஸிஸ்டண்ட் டைரக்டர்.

கே.ஆர்.ராமலிங்கம் நல்ல மனிதர். வேலையில்லாத நேரத்தில் என்னை எடிட்டிங் அறைக்கு தினமும் வரச்சொல்வார். எடிட்டிங் பற்றியும் நான் தெரிந்து கொள்ள ரொம்ப உதவியாக இருந்தவர் ராமலிங்கம்.

பெங்களூரு அசோகா ஓட்டலில் வி.கே.ராமசாமி, சுமலதா காம்பினேசனில் ‘சந்தம் தப்பாது, தாளம் தப்பாது’ பாடல் ஷூட்டிங்.
இன்னும் வி.கே.ராமசாமி பற்றி பதிவு எழுதவில்லை. வி.கே.ஆர் என்னைப் பற்றி பிறரிடம் சொன்ன வார்த்தைகள்: ’ இந்த யூனிட்டில் இந்தப் பையன் ஒரு ஜென்ட்ல்மேன்.’
இதையும் நான் இதுவரை எங்கும் குறிப்பிட்டதேயில்லை. இவ்வளவு காலம் கழித்து, எவ்வளவோ எழுதிய பின் இப்போது தான் சொல்கிறேன்.

வி.கே.ஆரின் மனைவி ரமணி முன்னாள் நடிகை. இவர் ஷூட்டிங் போது என்னைப்பற்றி டைரக்டரிடம் கேட்டார்.”இந்தப்பையன் கலைவாணனின் தம்பியா?”
எனக்கு அப்போது கலைவாணனைத் தெரியாது. பார்த்ததும் கிடையாது. கண்ணதாசன் மகன் என்பதும் நான் அறிந்திருக்கவில்லை.
ரமணி சொன்னார் : ’இந்தப் பையன் கலைவாணன் சாயலில் இருப்பதால் கேட்கிறேன்.’

அப்போது கலைவாணன் ஹீரோ ஆகும் ஆசையில் இருந்திருக்கிறார்.
டைரக்டர் சொன்னார் : ’இல்லம்மா. இவன் டைரக்சன் கத்துக்க வந்திருக்கிறான். இவனுக்கும் அவன மாதிரி ஹீரோ ஆச வந்துடாம!’
ஏனோ ஒவ்வொருவருக்கும் என்னைப் பார்த்தால் அந்தக் காலத்தில் யார் யாரோ மாதிரி தோண்றும். இதற்கு என்ன சொல்ல முடியும்?

அப்புறம் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் கலைவாணனை சந்தித்த போது எனக்கும் கலைவாணனுக்கும் அப்படி சாயலில் எந்த சம்பந்தமும் கிடையவே கிடையாது என்று உறுதியாக எனக்குத் தோண்றியது.
                                 ( கலைவாணன் )
கலைவாணன் என்னை விட உயரம்.ஆறடி இரண்டு  அங்குலம்!
கண்ணதாசன் பிள்ளைகளில் அவரைப்போல உயரமானவர் கலைவாணன்.
என்னையும் அவரையும் அறிந்த நண்பர்கள் யாரும் எங்களுக்குள் சாயல் ஒற்றுமை இருந்ததாக சொன்னதேயில்லை. சொல்லப்போனால் நாங்கள் இருவரும் முற்றிலும் மாறுபட்டவர்கள். சாயல் ஒற்றுமையென்று கிஞ்சித்தும் கிடையாது என்று அடித்துச்சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் என்னை முதல் முறையாக பார்த்தவர்கள் சிலரும் கலைவாணனை முதலில் பார்த்தவர்களும் மட்டுமே  நாங்கள் இருவரும் ஒரே சாயல் என்று சொல்லியிருக்கிறார்கள்.

’கரை கடந்த ஒருத்தி’ பட வில்லன் மனோபாரதி
( இவருடைய மகள் ‘பிரியமுடன் பிரபு’ படத்தில் கதாநாயகி ) எனக்கு கொஞ்சம் அறிமுகம். அவர் ரோகினி இண்டர் நேசனல் லாட்ஜில் மற்ற சிலரிடம் என்னை காட்டி “ ஜி.என்.ரங்கராஜனை அவர் ஆஃபிஸில் போய் நடிக்க சான்ஸ் கேட்டு சந்திக்கப்போய் இருந்தேன். அங்கே கலைவாணன்னு அவரோட அசிஸ்டண்ட். அவர் பார்க்க இவர் போலவே இருக்கிறார். ” என்றார்.

தேனாம்பேட்டையில் ஒருவர் என்னிடம் “ நீங்க கலைவாணன் தம்பியா?” என்று வலிய வந்து கேட்டார்.
இப்படி சென்னையில் நான் இருந்த காலங்களில் எனக்கும் கலைவாணனுக்கும் சாயல் ஒற்றுமை இருப்பதாக வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு மனிதர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பல மாதங்கள் பழகிய அளவில் எனக்கும் கலைவாணனுக்கும் முக சாயல் என்பதெல்லாம் கிடையவே கிடையாது என்பது எனது திண்ணமான அபிப்ராயம்.

படம் பார்க்க நான் தேவி காம்ப்ளெக்ஸ் போயிருந்த போது கலைவாணன் அங்கே வேறு ஒரு படம் பார்க்க வந்திருந்தார். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை போடுவார். அப்போது நான் ‘சாமி’ என்று அழைப்பேன்.

எடிட்டிங் அறையில் தினமும் சந்திக்கிற சூழல் இருந்த போது அவர் எப்போதும் ஒரு குறிப்பிட்ட பாடலை வாய் விட்டு பாடிக்கொண்டே தான் இருப்பார். அது அவர் அப்பா எழுதிய பாடல் தான். எனக்கு இப்போது கூட அந்தப் பாடல் கேட்க நேரும்போது கலைவாணன் நினைவு தான் உடனே வரும்.
அந்தப்பாடல் “ அழகே அழகு, தேவதை! ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்!”

இந்த அழகே, அழகு பாடல் காட்சியை ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது. பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது.

சிவாஜி கணேசன் ஷுட்டிங் ஒன்றில் ஒரு அசிஸ்டெண்ட் “ டேய் கலைவாணா!” என்று கூப்பிட்ட போது “ டேய், இங்க வாடா. என்.எஸ்.கே கலைவாணர் பெயரைத்தான் இவனுக்கு கவிஞர் வைத்திருக்கிறார். இப்படி மரியாதையில்லாம கூப்பிடாதடா.” என்று சிவாஜி கண்டித்ததுண்டு.


கலைவாணன் அவருடைய அண்ணன் கண்மணி சுப்பு இயக்கத்தில் “அன்புள்ள அத்தான்” படத்தில் ஷோபாவுக்கு ஜோடியாக நடித்த போது கவிஞர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்துப் போய் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் காட்டியிருக்கிறார்.
“ இவன் நடிக்க ஆசைப்படுகிறான். இவனுக்கு உங்க ஆசி வேண்டும்”


கலைவாணன் சிரிக்கும்படியாக உரையாடுவார். நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர்.
அப்பாவிடம் “ யாரைப்பற்றியெல்லாமோ பாட்டெழுதியிருக்கிறீர்களே. என்னைப் பற்றி ஒரு பாட்டு எழுதுங்கப்பா” என்று சொன்னபோது கவிஞர் உடனே, உடனே “ உன்னைப்பற்றி எப்போதோ எழுதி விட்டேனே! ’ஏன் பிறந்தாய் மகனே! ஏன் பிறந்தாயோ? இல்லை ஒரு பிள்ளையென்று ஏங்குவோர் பலர் இருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்ல மகனே!’ பாட்டு உன்னைப் பற்றித் தான் எழுதினேன்!” என்றாராம்.


தன் அண்ணன் கண்மணி சுப்பு இயக்கத்தில் ஷோபாவுடன் கலைவாணன் நடித்த “அன்புள்ள அத்தான்” Utter flap!

(இப்போது சில வருடங்களுக்கு முன் கலைவாணன் மகன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக நடித்த ’பொன்மாலைப் பொழுது’ படம் கூட ஓடவில்லை. இந்தப் பட பூஜையில் கமல் ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.)

அமெரிக்கா போயிருந்த போது உடல் நிலை மிகவும் சீர் கெட்டு மருத்துவமனையில் இருந்த கவிஞரை கவனித்துக்கொள்ள கலைவாணன் சென்றார். அங்கே கவிஞரின் மூன்று வயது குழந்தையான தன் step sister விசாலியை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சி விளையாண்டிருக்கிறார்.

 கண்ணதாசன் அமெரிக்காவிலேயே இறந்த பின் உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. ஈமக்கிரியையில் கொள்ளி போடும் கண்மணி சுப்பு அருகில் கதறி அழுதவாறு கலைவாணன் நிற்கிற நிழற்படம் செய்திப் பத்திரிக்கையில் நான் பார்க்க நேர்ந்தது.

பின்னாளில் கலைவாணன் “கண் சிமிட்டும் நேரம்” “ வா அருகில் வா” என்று இரண்டு த்ரில்லர் படங்களை இயக்கினார்.


அகால மரணம் என்பது யாருக்கு என்றாலும் வேதனையான, கொடுமையான விஷயம்.
A  promising future was cut short.
ஏன்? எதனால்? போன்ற காரணங்கள் துச்சமானவை.



………………………………..

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_12.html