Share

Apr 14, 2016

புவியில் எண்ணிலாத கண்டீர்!


அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் டேவிட் செடாரிஸ்
நூல் – “Me talk pretty one day”


செடாரிஸுடைய அப்பா அவரிடம் சிறுவனாக இருக்கும்போது கடற்கரையில் கேட்கிறார்: உலகம் முழுவதும் மொத்தமாக எவ்வளவு மணல் துகள் இருக்கிறது தெரியுமா?”
அவருக்கு பள்ளியில் படிக்கும்போது நடந்த ஒரு விஷயம் நினைவில் வருகிறது.
’ஒரு பறவை அமெரிக்க கிழக்கு கடற்கரையில் இருந்து ஒவ்வொரு மணல் துகள்களாக தென் ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் கொண்டு சேர்க்க எவ்வளவு வருடங்கள் ஆகும் தெரியுமா? .... வருடங்கள்!’ என்று ஆசிரியர் சொல்லக்கேட்ட போது
இவர் அந்த ஆசிரியர் குறிப்பிட்ட வருடங்கள் எவ்வளவு என்பதை கிரகித்துக்கொள்ளவில்லை.
ஆனால்இந்த வேலையற்ற வேலையை செய்வதற்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட அந்த ஒற்றைப் பறவை குறித்துத்தான் அந்த வயதில் முழுவதுமாக கவனம் குவிந்திருக்கிறது. The single bird chosen to perform this thankless task!
The Glory of being a bird is that nobody would ever put you to work. ஒரு குதிரை போல மாடு போல வேலை செய்ய வேண்டிய கஷ்டமேயில்லாத பிறவியல்லவா பறவை?
“வானத்துப்பறவைகளைப் பாருங்கள்! அவை விதைப்பதுமில்லை. அறுப்பதுமில்லை.” - ஜீசஸ் க்ரைஸ்ட்.
“விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக்குருவி போல” என்று பாரதியார் சொன்னார்.
ஏதோ தானியங்களைத் தேடுவதும், கூடு கட்டுவதுமான இயல்பான இலகுவான வாழ்க்கை பறவையுடையது. அதன் leisure time அதன் நோக்கில் தான் செலவழியும். இப்படி மணலை ஒரு கண்டத்தில் இருந்து எடுத்துக்கொண்டு இன்னொரு கண்டத்துக்கு வருடக்கணக்கில் ட்ரான்ஸ்போர்ட் செய்ய .. பறவைக்கு என்ன தலையில ஓத்த விதியா..?
கிளையொன்றில் அமர்ந்திருந்த அந்தப்பறவை குனிந்து ஏளனமாக கேட்கிறது: "You want me to do what?!" பறப்பதற்கு முன்
’முட்டாள்தனமான அஸைன்மெண்ட்’ பற்றி எள்ளி நகையாடி விட்டு அதன் பின் கிளம்பி இந்த ’வெட்டி ஓலு, நித்திரைக் கேடு’ ப்ராஜக்ட் விஷயத்தை தன் சக பறவைகளிடம் சொல்ல கிளம்புகிறது.
செடாரிஸ் தன் அப்பாவின் கேள்விக்குத் திரும்புகிறார்.
How many grains of sand are there in the world?
- 'A lot.'
Case closed.
.....

சினிமால ஒரு டைரக்டர் கிட்ட அஸிஸ்டண்ட் டைரக்டரா சேரும்போது ஒரு விஷயம் தப்பிக்கவே முடியாது. ’ஒரு கதை சொல்லுங்க’ என்று பிரபல டைரக்டர்கள் அந்தக்காலத்தில் சொல்வாங்க. இந்தக்காலத்தில் எப்படியோ தெரியவில்லை.
இப்படி என்னிடம் கே பாக்கியராஜ் ’ ஒரு கதை சொல்லுங்க’ என்று கேட்டபோது
என் பதில் “ வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமலிருப்பது!” ஜென் பௌத்தம்!
(ஓவியம் : மு.நடேஷ்)

“ வில் வித்தையின் உச்சகட்டம் அம்பை எய்யாமலிருப்பது!”
இந்த ஒற்றை வரி தத்துவம் Capacity,Ultimate Power,Real test,Endurance,Reticence,Humbleness,Maturity,Perfection போன்ற இன்னும் பல பரிமாணங்களை உள்ளடக்கிய விஷயம்.
Never Explain! Never miss a good chance to keep silence!

......................................................................



கமலுக்கு தசாவதாரத்தில் வாயல். விஸ்வரூபத்தில் சீஸியம்.

சீஸியத்தை வைத்து ஒரு நாவல் The Overlook. மைக்கல் கான்னல்லி எழுதியது.
இந்த மைக்கல் கான்னல்லி ’முக சாயல்’ கொஞ்சம் நம்ம சாரு நிவேதிதா போல தெரிகிறது!

சீஸியம் கையாளுகிற வாய்ப்புள்ள ஒரு சைன்டிஸ்ட். சீஸியம் வேண்டி இவரை தீவிரவாதிகள் தேடி வரும் வாய்ப்பு பற்றி FBI எச்சரிக்கை செய்ய இரு ஏஜன்ட்களை அனுப்புகிறது. அவருடைய மனைவி அவர்களில் ஆண் ஏஜன்ட் மாக்ஸ்வெல்லிடம் மனதைப் பறிகொடுக்கிறாள். வேலியே பயிரை மேய முடிவு செய்தால்……
தன் கணவனை அந்த FBI கறுப்பாடு துணையுடன் மனைவியே கொலை செய்கிறாள். சீஸியம் வேண்டி முஸ்லிம் தீவிரவாதிகள் கொன்றது போன்று கொலையாளிகள் இருவராலுமே இந்த கொலைகேஸ் திசை திருப்பப் படுகிறது.
Framing Muslim terrorists with a crime they didn’t commit. They can never defend themselves! Caesium and the terrorists were part of the misdirection.
It’s not about caesium or terrorism. It’s the basic equation: sex plus money equals murder.
Detective Harry Bosch in Michael Connelly’s novels.
இந்த நாவலை திரைப்படமாய் எடுத்தால் இங்கே யாரும் கோபப்படமாட்டார்கள்!
Mr.Intolerantக்கு கோபப்பட இந்தக் கதையில் எந்த முகாந்திரமும் இல்லை.
ஆசிஸ் நந்தி, கமல் ஹாசன், தஸ்லிமா நஸ்ரின், சல்மான் ருஷ்டி என்று எல்லோரையும் ஜெயித்து விட்டதாக கொக்கரிக்கும் Mr.Intolerant!
Mr.Intolerant - Disrupter of Peace is winning so far!
சொற்றை நீதி தொகுத்து,குற்றமே மகுடமாய்க் கொண்டு,
 மேம்பட்ட அதி மானிடரின் 'சுதந்திர சிந்தனை'யை மிரட்டும் Mr.Intolerant!
We are living in deeply troubled times.
............................

Minnambalam.com ல் ’ஜென் பௌத்தமும் கமலின் சீசியமும்’ தலைப்பில் 7 ஏப் 2016 அன்று வெளியாகியது.

https://minnambalam.com/k/1459987306

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.