Share

Aug 10, 2014

கவிஞர் மகுடேசுவரன் பார்த்த RP ராஜநாயஹம்




                   [img118e+blog.jpg]      
செப்டம்பர் 24, 2013

நொய்யல் கரையோரச் செல்லாண்டியம்மன் துறை வழியாய்ச் சென்றுகொண்டிருந்தேன். தலைபிளந்து இறந்த திருப்பூர்க் குமரனின் சவத்தைத் தொட்டில் கட்டித் தூக்கி வந்து எரித்துச் சாம்பலாக்கிய இடம்.

என் முன்னால் நீலநிற ஆக்டிவா ஸ்கூட்டரில் RP ராஜநாயஹம் சென்றுகொண்டிருந்தார். இப்பெயரை எண் கணிதப்படி பிரமிள் தமக்குச் சூட்டியதாகச் சொல்வார்.

என் ஊர்ச் சாலைகளில் எதிரும் இணையுமாக அவரை அடிக்கடி பார்ப்பேன்தான். நின்று நிதானித்துப் பேசியதில்லை. இன்று அவரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டேன்.

ஒரு மணிநேரத்தில் தம் பத்து வருடத் திருப்பூர் வாழ்க்கையை அங்கங்கே தொட்டதும் பட்டதுமாக விவரித்தார்.  

திருவள்ளுவர் சொல்கிற கேட்டார்ப் பிணிக்கும் தகையதாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல் என்றால் அதற்கு என் அருகில் உள்ள உதாரணம் ராஜநாயஹம்தான்.

மனிதர் அவ்வளவு எளிதில் பேசத் தொடங்க மாட்டார். ஏதேனும் ஒரு மர்மத் தூண்டுதலைத் தோற்றுவித்துவிட்டால் போதும், மடை திறந்த வெள்ளம்தான். பிறகு நம் வேலை சிரிப்பதும் கருத்துகளில் திளைப்பதும் வந்துவிழும் அனுபவச் சாரலில் குளிப்பதும் கடும் விமர்சனங்களில் பிரமிப்பதும்தாம்.

தமிழ் சினிமாவை ரசனைத் தரப்பிலிருந்து மணக்க மணக்கப் பேசத் தகுதி படைத்த ஒரே ரசனைக்காரரும் ராஜநாயஹம்தான். அவருடன் பேசிய உணர்வுச் சுழலுடன் அவர்தம் வலைத்தளத்தில் இருந்த கட்டுரைகள் அனைத்தையும் படித்தபின்தான் மனம் ஆறியது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.