Share

Mar 12, 2013

குண்டு குண்டு கபூர்கள்!



Barfi! ரன்பிர் கபூர் படம். அவனுடைய தாத்தா ராஜ்கபூர் படம் பார்த்த திருப்தி. 

கொள்ளுத் தாத்தா ப்ருத்வி ராஜ்கபூர் வம்ச பரம்பரை.
ராஜ் கபூர், ஷம்மி கபூர், சசி கபூர் மூவருமே வெகுவாக மாறுபட்ட தனித்தன்மை மிக்கவர்கள்.

ராஜ் கபூர் வெளிப்படுத்திய சாப்ளின் பாணி.

’ஓ மெஹ்பூபா! ஓ மெஹ்பூபா! ’

’ஜீ நாயகா மருநாயகா’


ஷம்மி கபூர் டான்ஸ். காஷ்மீரை Glamourize செய்த காதல் மன்னன். இன்றும் அந்த டான்ஸ் மிஞ்ச ஆள் இல்லை. What an arrogance! சமீபத்தில் ரன்பிரின்  அப்பா ரிஷி கபூர் கூட தன் சித்தப்பா ஷம்மியை யாராலும் ரீப்ளேஸ் செய்யவே முடியாது என்று சொல்லும்படி தான்.

Rishi Kapoor says " The Ultimate Romantic hero is a slot reserved for Shammi Kapoor! Just look at his style, the aura, everything about him was fantastic!"

’அந்தாஸ்’ படத்தில்  நின்று கொண்டிருக்கும் ஹேமா மாலினியின் பாதத்திலிருந்து தலை வரை ஆப்பிளை தன் வாயாலேயே உருட்டும் ஷம்மி கபூர்!..தில் வுசுஜோ சோஜா...

ரோமன் போலன்ஸ்கியின் china town படம் 1974ல் ஜாக் நிக்கல்சன் நடித்து வந்தது எல்லோருக்கும் தெரியும். முன்னமே அதே டைட்டிலில் ஷம்மி கபூர் நடித்துக்கூட 1962ல் ஒரு china town ஹிந்திப்படம் வந்தது! இரண்டுக்கும் கதையில் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஷம்மி கபூர் இறந்த போது ஹ்ரித்திக் ரோஷன்  Tribute: வழக்கமான RIP கிடையாது. Dance In Heaven!
For Shammi, I don’t want to say ‘Rest In Peace’ but rather ‘ Dance in Heaven!’

சசி கபூர் ரொம்ப ஒல்லியாக ’ப்யார் கா மௌசம்’ ’ஷர்மீலி’ படங்களில்!

’தும் பின் ஜவுன் கஹான்? தும் பின் ஜவுன் கஹான்? ’

’கில் தே ஹைன் குல் யஹான், கில் கேபி கர்னகோ’

‘கைஸெ கஹெ ஹம் ப்யார் நெ ஹம் கோ, க்யா க்யா கேல் திகாயே’




ரன்பிர் கபூரின் பெரியப்பா ரந்திர் கபூர். கரிஷ்மா, கரீனாவின் அப்பா.
கல் ஆஜ் அவுர் கல் படத்தில் தாத்தா ப்ருத்வி, அப்பா ராஜ், ரந்திர் மூவரும் நடித்திருக்கிறார்கள்.

’ஜவானி திவானி’ ஜெய பாதுரிக்கு ஜோடியாக ரந்திர் கபூர். என்ன பாடல்கள்! பின்னால்அபிஷேக் பச்சனுக்கும் கரிஷ்மா கபூருக்கும் ஊர் கூடி கல்யாணம்  நிச்சயமாகி கேன்சலாகிப்போகும் என்பதை அப்போது நினைத்திருக்க மாட்டார்கள்!

அந்தக் காலத்தில் ரந்திர் கபூரை Sexiest Male என்று ரேகா சொல்வார்!
எம்.ஜி.ஆர் ‘ரிக்‌ஷாக்காரன்’ இந்தியில் ரிக்‌ஷாவாலா.ரந்திர் கபூர் தான் அதில் கதாநாயகன். ’ஹாத் கி ஷஃபாய்’ வெற்றிப்படம்!ரந்திருக்கு சீக்கிரம் மார்க்கெட் போய்விட்டது.


ரிஷி கபூருக்கு ஸ்டெடி மார்க்கெட். நல்ல டான்ஸர். 
ஆனால் monotonous acting!

மேரா நாம் கபூரில் ஜூனியர் ராஜ்கபூர். பாபி ஹிட். கேல் கேல் மைன். ஹம் கிஸிசே கம் நஹின் வரை ரிஷி கபூர் ஜோர் தான். ஜாலி தான். ’கர்ஸ்’  தான் எனக்குள் ஒருவன் என்று தமிழில் கமல் நடித்தது!


ராஜ்கபூரின் மூன்றாவது மகன் ராஜீவ் கபூர் ஒரு ஃப்ளாப்.


ரன்பிர் கபூர் ’சாவரியா’ பார்த்த போதே நல்ல நடிகன் என்பது தெரிந்தது. தாஸ்தாவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் கதையைத் தழுவியது.
பர்ஃபி யில் ரன்பிர் நடிப்பு உன்னதம்.  இலியானா ஒரு கவிதை!
‘பூனை மூக்கி’ பிரியங்கா சோப்ரா பிய்த்து உதறியது மகா ஆச்சரியம்! 


கபூர் குடும்ப நடிகர்கள் எல்லோருமே ஒரு விஷயத்தில் மாறுதலில்லாதவர்கள்.
கதாநாயகன் மார்க்கெட் போனவுடனே,உடனே,உடனே  குண்டாகி ஊதிப்பெருத்து விடுவார்கள். ராஜ்கபூர், ஷம்மி கபூர், சசி கபூர் மூவருமே அளவுக்கு மேல் பெருத்து மூச்சி விடவே சிரமப்பட்டார்கள். ரந்திர் கபூரும் மார்க்கெட் போனவுடன் மஹா குண்டன். இப்போது ரிஷி கபூர்!

…………………….

http://rprajanayahem.blogspot.in/2009/08/o-mehbooba-o-mehbooba.html

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_22.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_06.html

 http://rprajanayahem.blogspot.in/2012/05/blog-post_28.html


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.