Share

May 14, 2012

சாந்தகுமாரி

சாந்தகுமாரி  - பழைய பட ரசிகர்கள் இவரை இப்போது கூட
 நினைவில்  வைத்திருக்க முடியும். ஏனென்றால் அந்தக் காலத்தில்
மிகப் பிரபலமான
இரண்டு படங்களைப் பார்க்காத தமிழர்கள் இருக்கவே முடியாது.
1. சிவந்தமண்(1969 ) 2.வசந்தமாளிகை (1972 )
இந்த இரண்டுப் படங்களிலும் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்தவர் !
சிவந்த மண்ணில் " பாரத் " என்றும் வசந்த மாளிகையில் "ஆனந்த் " என்றும்  கதை  நாயகனை அடிக்கடி   அழைக்கின்ற இவர் குரல் இப்போதும் கூட  காதில் ஒலிக்கும்!

  நெஞ்சில் ஓர் ஆலயம் - கல்யாண்குமாரின் அம்மா.

இவரை ஒரு துணை நடிகை என்று தான்
பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால் இவர்
 ஒரு சிறந்த வயலின் கலைஞர்.
 1930களின் துவக்கத்தில் 
D.K.பட்டம்மாள் கர்நாடக சங்கீத கச்சேரிகளில்
இவர் தான்
வயலின் பக்க வாத்தியம் வாசிப்பவராக இருந்திருக்கிறார்.
பட்டம்மாளின் வகுப்புத்தோழி.கர்நாடக சங்கீதத்தில் முதல் வகுப்பில் அப்போது தேறியவர் சாந்தகுமாரி. 
1935 ல்  விதி வசத்தால் நடிகை ஆகியிருக்கிறார். அப்போதே 'சாரங்கதரா '(1935 ) படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
அதே வருடம் மாயாபஜார் என்ற படத்தில் நடித்துள்ளார்.
1936ல் இவர் நடித்து வெளி வந்த' தர்ம பத்தினி' படம் அக்கினேனி நாகேஸ்வர ராவ் ( தேவ தாஸ் ) குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன படமாம்!
 டைரக்டர்  பி,புல்லையா வை காதலித்து
திருமணம் செய்து கொண்டார்.
ஒரு கர்நாடக  சங்கீத வாத்திய  கலைஞர் சினிமாவில் கதாநாயகியாக மாறி
ஒரு பிரபல டைரக்டருக்கு மனைவியாகி 
அதன் பின்
ஒரு மிக சாதாரண
துணை நடிகை!  

வெள்ளாள சுப்பம்மா என்ற இயற் பெயர் கொண்ட
சாந்தகுமாரி மிகச் சிறந்த நடிகரான
எஸ்.வி.ரங்காராவின் உறவினர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.