Share

Apr 29, 2012

ஜமுனா ராணி


" என் ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா "

"செந்தமிழ் தேன் மொழியாள்"

"காமுகர் நெஞ்சில் நீதியில்லை"

" அக்காளுக்கு வளைகாப்பு அத்தான் முகத்திலே புன்சிரிப்பு "


" காளை வயசு கட்டான சைசு  களங்கமில்லா மனசு "

"சித்திரத்தில் பெண் எழுதி சீர் படுத்தும் மானுடமே ஜீவனுள்ள பெண்ணினத்தை வாழவிட மாட்டாயா "

"பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை  "

"அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே "

" ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான்"

"நெஞ்சினிலே நினைவு முகம் நிலவிலும் தெரிவதும்  
அழகு முகம் ஆசைமுகம் "

"எனக்காகவா நான் உனக்காகவா என்னைக் காணவா என்னில் உன்னைக் காணவா வா வா "

"புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் "

இந்த கீதங்களில் குழையும் ஜமுனா ராணி. 

இது ஒரு வகை.

இன்னொரு பாணி பாடல்கள் உண்டு.

அன்பு எங்கே படத்தில் " மேலே பறக்கும் ராக்கெட்டு. மின்னல் பூச்சி ஜாக்கெட்டு "

உத்தம புத்திரனில் "யாரடி நீ மோகினி " பாட்டில்
 " விந்தையான வேந்தனே !"

 குமுதம் படத்தில் " மாமா,மாமா மாமா "


மரகதத்தில் சந்திரபாபுவுடன் " குங்குமப் பூவே, கொஞ்சும்புறாவே"

ரொம்ப பல வருடங்கள் ஸ்டுடியோ வாசலையே மிதிக்காமல் இருந்த ஜமுனா ராணிக்கு 1987ல்  'நாயகன்' படத்தில் " நான் சிரித்தால் தீபாவளி''பாடலுக்காக இளைய ராஜா மூலம் வாய்ப்பு கிடைத்தது!

ஜமுனா ராணி அந்தக்கால இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிய அனுபவம் பற்றி சொன்ன விஷயங்கள்:

"1. ஜி. ராம நாத ஐயர் சொல்கிற சங்கதிகள் பாடுகிறவர் குரலில் வந்தே தீரவேண்டும். அந்த சங்கதிகள் வராமல் பின்னணி பாடகரை விடவே மாட்டார்.
2.  மாமா கே.வி.மகாதேவன் மெட்டின் உருவத்தை அழகாக கோடி காட்டி விடுவார்." உன் கற்பனைக்கு ஏற்றவாறு உணர்ச்சி,பாவத்துடன் பாடி , தேவையான இடத்தில் சங்கதிகள் நீயே போட்டுக்கொள் " என்று பாடுபவருக்கு முழு சுதந்திரம் கொடுக்கக்கூடியவர்!
3. விஸ்வநாதன் -ராமமூர்த்தி  எப்படி சொல்லிக்கொடுக்கிரார்களோ அப்படியே தான் அச்சர சுத்தமாக பாடியே தீரவேண்டும்.பாட்டின் ஒவ்வொரு சொல்லும் தெளிவாக ஒலிக்கவேண்டும்.இதில் இசை அமைக்கும்  இருவருமே  கவனமாக இருப்பார்கள்.அப்படிப் பாடலைன்னா ஒலிப்பதிவுக்கூடத்திலேயே பாடுபவரின் மானம் கப்பலேறிவிடும்." பாடத்தெரியாம ப்ளேபேக் சிங்கர்னு  சொல்லிக்கிட்டு ஏன் பாடவர்றீங்க'' - இப்படி எம்.எஸ். வி கேட்டு விடுவார். அதனால் பயந்து கொண்டே தான் பாடுவோம்."

Apr 21, 2012

"சாட்டைஎடுத்தார் யூதரெல்லாம்"




பின் நவீனத்துவம் பற்றிய ஒரு கருத்தரங்கம் சென்னை லயோலா கல்லூரியில் பத்து வருடங்களுக்கு முன் நடந்தபோது அங்கே எழுத்தாளர் குமார செல்வா சொன்ன நிஜ நிகழ்வு. '' ஏசு நாதர் கெட்ட வார்த்தை பேசினார்! " திருச்சி ஆர் சி ஸ்கூல் கேம்பஸில் உள்ள தமிழ் இலக்கிய கழகத்தில் என் நண்பர் ஆங்கிலப் பேராசிரியர் நோயல் ஜோசப் இருதயராஜ் இதை ரொம்ப ரசித்து சொன்னார். 
அந்த ஒற்றை வாக்கியம் " ஏசுநாதர் கெட்டவார்த்தை பேசினார்" 

இங்கே காட்சியாய்.

பாஸ்கா பண்டிகை.
நாடகம் பாஸ்கா பண்டிகையில் இரவு பூரா நடக்கும்.
ஏசு சாமியை சிலுவை சுமந்து செல்லும்போது நாலு பேர் சாட்டையால் அடிக்கிற காட்சி. ஏசு வாக நடிக்கிறவர் மிக உருக்கமாக சிலுவை சுமந்து வரும்போது யூத சிப்பாய்கள் அவரை அடித்துக்கொண்டே வருவார்கள். " தேவ மைந்தன் போகின்றார் " என்று பாடல் பின்னணியில். சாட்டையால் அடிக்கிற செவெத்தியான்( செபஸ்தியான் ) அந்த ரோலை கெஞ்சிக்கேட்டு வாங்கியிருக்கிறான். எப்படியோ இந்த நாடகத்தில் ஒரு ரோல் செய்துடனும் னு அவன் ஆசைப்பட்டது தான். இவன் சிப்பாயாக வந்து சாட்டையால் அடிக்கிற மாதிரி சும்மா பாவலா செய்யணும். அப்படி முதல்ல அடிக்கிற மாதிரி பாவலா  தான் அவனும் மற்ற மூணு சிப்பாய்களாக நடித்த ஆளுங்க போல செய்திருக்கிறான்.ஆனா அவன் ஊர்க்காரன் ஒருத்தன் " ஏலே ! அங்க பாருலே நம்ம செவத்தியான்." என்று கூப்பாடு போட்டது நடிக்கிறவன் காதிலே விழுந்தது. இன்னொருத்தன் " எங்கலே? எங்க ?'' என்று கேட்கிறான்.
" ஏலே செத்த மூதி. அன்னா பாருலே. ஏசுவை சாட்டையால் அடிக்கிறான் பாருலே."
'' எவம்லே! நாலு பேருல்லே அடிக்கான்!''
" ஏலே! பச்சை டிரஸ் போட்ட சிப்பாய் நம்ம செவெத்தியான்லே!"
Recognition !

"சாட்டைஎடுத்தார் யூதரெல்லாம்......தாவியடித்தார் மேனியிலே ..." பின்னணியில் பாட்டு ...
செவத்தியானுக்கு நடிப்பு இயல்பா, யதார்த்தமா இருக்கணும் என்ற அக்கறை அதிகமாகி விட்டது. ஏசு வேசம் போட்ட ஆளை நோக்கி சாட்டையை பலமாய் வீச ஆரம்பித்தான். ஏசு வாக நடித்த ஆள் மூஞ்சி உருக்கம் சோக பாவம் எல்லாம் மறைந்து வெளிறிப்போனது. 
செவெத்தியானோ வெனில் தன் இயல்பான நடிப்பை காட்டுவதிலேயே தீவிரமாக தவ்வி தவ்வி  இயங்க ஆரம்பித்தான் .
ஏசு " ஏலே நாரபுண்டழுதை. வலிக்குதுலே "
செவெத்தியான் யதார்த்த  நடிப்பின் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்தான்.  
ஏசு மற்ற சிப்பாய்களை நோக்கி " ஏலே ! நிசமாவே அடிக்காம்லே.'' செவத்தியானிடம் திரும்பி ஏசு  
"ஈனப்புண்டழுதை. 
ஒன்னை கொன்னுருவம்லே.சவத்துக்கூதி...வலிக்குதுல்லே.........
ஒக்காபுண்ட.. நிறுத்துறியா இல்லையால்லே."

...................................

 

Apr 13, 2012

ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்!

இன்றைக்கு அசோகமித்திரனுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து SMSஅனுப்பி ஆசியை வேண்டினேன். அவர் 'God  bless you' என்று பதில் அனுப்பினார். நான் அதற்கு பதிலாக அனுப்பிய SMS 'Great  writers are  the saints  for   the  godless '.


சென்ற ஜனவரி 30 ம் தேதி இங்கே புத்தகக்கண்காட்சியில் தற்செயலாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தேன். என்னை 'சேர்தளம்' திருப்பூர் வலைத்தள எழுத்தாளர்களுக்கு  அறிமுகப்படுத்தினார்(!) அப்போது என்னைப்பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்  சொன்னார் : "  ராஜநாயஹம் - ஆயுதங்களை கைவிட்டு அஞ்ஞாத வாசம் செய்யும் அர்ஜுனன்! ரொம்ப வருடங்களாக  இப்படித்தான் இருக்கிறார்!"  


நான் மார்ச் 30ம் தேதி  'நீ ஏய்யா அழற ?' பதிவை எழுதினேன். முந்தாநாள் புதன் கிழமைஏப்ரல் 11 தேதி கடைக்கு வந்துள்ள  குமுதத்தில்(முகப்பில் அச்சில் உள்ள தேதி 18 -4 - 2012 ) ' இன்பக்கனா ' நாடகம்  விபத்து பற்றி புகைப்படம் வந்திருக்கிறது.
நேற்று ஏப்ரல் 12 ம் தேதி  ஆனந்தவிகடனில்(அச்சில் உள்ள தேதி 18 -4 -12 ) 'இன்பக்கனா ' நாடகத்தில் எம்ஜிஆர் நடிக்கும்  ஸ்டில் ஒன்று வந்திருக்கிறது.
எம்ஜியாரை அப்போது  நவீனன் சந்தித்த போது எம்ஜியார் அந்த கால் முறிவு விபத்து பற்றி சொன்னதை பிற்காலத்தில்  நடிகர் ராஜீவிடம்  சொன்னதாக குறிப்பிடும் விஷயங்களில் நாடக சண்டைக்காட்சியில் எம்ஜியாருடன் குண்டு மணி யோடு இணைந்து சண்டையிட்ட மற்றொரு நடிகர் யார்  என்று குறிப்பிடப்படவில்லை. என் பதிவில் நான் தெளிவாக எழுதியிருக்கிறேன். அந்த நடிகர் புததூர் நடராஜன். கால் உடையும் போது  என்னமோ 'களுக் ' என்றது என எம்ஜியார் சொன்னதாக நவீனன் சொன்னதாக ராஜீவ் இப்போது சொல்வதாக குமுதம் குறிப்பிடுகிறது . ஆனால் எம்ஜியார் கால் முறிவு விபத்தில் சம்பந்தப்பட்ட நேரடி சாட்சி புத்தூர் நடராஜன் கால் முறிந்த போது பட்டாசு வெடித்த மாதிரி சத்தம் கேட்டது என்றே சொல்லியிருக்கிறார் .
இந்த புத்தூர் நடராஜன் எம்ஜியாரின் பல படங்களில் நடித்தவர் .தலை மொட்டையாயிருக்கும்.'ஆயிரத்தில் ஒருவன் ' படத்தில் ' ஏன் என்ற கேள்வி ' பாட்டில் எம்ஜியாருடன் நடித்தவர்.  ' நான் ஆணையிட்டால் ' படத்தில் கொள்ளைக்கூட்டத்தில் ஒருவராக வந்து எம்ஜியாரைப் பார்த்து கேட்பார் " திருந்து , திருந்துன்னு சொல்றியே ! திருந்துன்னா என்னா?"  ரகசிய போலிஸ்  115ல் கொள்ளைக்கூட்டத்தலைவனாக நடித்தவர் புத்தூர் நடராஜன் தான்! பல சினிமா  ரசிகர்கள் இவரையும் குண்டுமணி ஆகத்தான் நினைத்துக்கொண்டிருந்தார்கள். தியேட்டரில் இவரை திரையில் காணும்போது 'குண்டுமணி , குண்டு மணி ' என்று கத்துவார்கள் . எம்ஜியார் ரசிகர்கள் இவரை சின்ன குண்டுமணி என்று சொல்வார்கள்.
எம்ஜியார் திமுகவிலிருந்து விலக்கப்பட்டு தனிக் கட்சி துவங்கிய பின் இவர் கருணாநிதியின் பாடிகார்ட் ஆக கருணாநிதியுடன் வெளியூர் பயணங்களில்  வருவதை பார்த்ததாக என்னிடம் சிலர் சொல்லி கேள்விப் பட்டேன். அதாவது எம்ஜியாரை விட்டு விலகி எம்ஜியாருக்கே எதிராக மாறினார் என்பதாக.
.....

சில காலம் நான் வலைத்தளத்தில் எழுதாமல் இருந்த காலங்களில் -
2010  ம் வருடம் ஆனந்த விகடனில்  அழகிரி -25 பகுதியில்  நான் என் வலைத்தளத்தில் 2008 ல்  அழகிரி பற்றி  எழுதியதை,  அப்படியே  எடுத்து செய்தி ஆசிரியர் திருமாவேலன்  பயன்படுத்தியிருந்தார் . அழகிரி பற்றிய குறிப்புகளில் இது தான் மிகவும் சுவாரசியமாயிருந்தது. என்னுடைய பிலாகில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிடவில்லை.
நன்றி: RP ராஜநாயஹம் என்று ஒரு வார்த்தை பிராக்கெட்டில் போட்டிருக்கலாம் தானே!




அடுத்து 2008 ல் என் Carnal Thoughts - 6 ல் இருந்து  கால்  'கட்டை விரல் '  சமாச்சாரம்   2010ல் கமல் ஹாசனின் ' மன்மதன் அம்பு ' படத்தில் சாதகமாக பயன் படுத்தப்பட்டிருந்ததை அறிய வந்தேன். மன்மதன் அம்பு  படத்தைப் பற்றி பேசுபவர்கள்  அந்த கட்டை விரல் விசயத்தை  குறிப்பிடுகிறார்கள்.



ப. திருமாவேலனும்  எஸ். கமல்ஹாசனும் வாழ்க !

 ' தெய்வத்திருமகள் ' படத்தில் APPLAUSEவாங்கும் சந்தானம் பேசும் ' கர்ணனுக்கு கவச குண்டலம் '  என்னுடைய ' பொறி சிந்தும் வெங்கனல் ' பதிவில் நான் அப்போதே குறிப்பிட்டிருக்கிறேன்.

http://rprajanayahem.blogspot.in/2009/12/blog-post_23.html