Share

Apr 2, 2009

Byron -Mad, bad and dangerous to know !

Byron (1788-1824)
முப்பத்தாறு வருடமும் ஒரு மூன்று மாதமும் இந்த பூவுலகில் வாழ்ந்தான் பைரன் . ஒரு கால் சற்றே ஊனமாய் பிறந்தவன் . அவனுடைய டான் ஹுவான் பற்றி முன்பு இங்கே எழுதியிருக்கிறேன் .
கிரேக்க சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது 37 வயதில் இறந்தான் . கிரேக்கர்கள் தங்கள் போராட்டத்தில் தோள் கொடுத்த இந்த ஆங்கிலேயனுக்கு மிகுந்த மரியாதை , பிரியம் செலுத்தினர் . இவன் மரணத்தின் போது நெஞ்சே அவர்களுக்கு வெடித்தது போல ஆகிப்போனது .காய்ச்சலில் படுத்தவன் போய் விட்டான் .37 நிமிடங்களுக்கு துப்பாக்கியைவெடித்து இவனுக்கு அஞ்சலி செலுத்தினர் .21 நாட்கள் துக்கம் அனுசரித்து வேதனை பட்டார்கள் . இந்த ஆங்கில கவிஞனின் இதயத்தை அவன் உடலில் இருந்து எடுத்து தங்கள் வசம் வைத்துக்கொண்டு உடலின் மீதியை இங்கிலாந்துக்கு அனுப்பினார்கள் .மிஸ்ஸொலோங்கி யில் பைரன் இதயத்தை புதைத்தார்கள் .

சொந்த நாட்டில் மத குருக்கள் ஆவேசப்பட்டார்கள் . Westminster Abbeyயில் அவன் உடலை புதைக்க அனுமதி கிடைக்கவில்லை . ஒரு கிராமத்தில் அவன் மூதாதையர் புதைக்கப்பட்ட இடத்தில் தான் மகா கவி பைரன் புதைந்தான் .

" மிக மோசமான விகார வாழ்வு வாழ்ந்தவன் . மிக அருவருப்பான கவிதைகள் எழுதியவன் , ஒழுக்கமற்ற தன்மை கொண்டவன் . நம் கிறிஸ்தவ மத கோட்பாடுகளுக்கு எதிரானவன் . பெண்களை கேவலமாக நடத்தியவன் . இவனை Westminster Abbey யில் புதைக்க கூடாது '' என அவன் இறந்து நூறு வருடங்கள் கழித்து பிஷப் ஹெர்பெர்ட்கோபப்பட்டார் . நூறு வருடங்கள் கழித்து சிலர் முயற்சித்த போது இப்படி பிஷப் சொன்னார் .
போராடி கடைசியாகWestminster Abbey யில் அங்கே Poets cornerல் 1969 ஆண்டு 'பைரன் நினைவுச்சின்னம் 'வைக்க மட்டும் தான் முடிந்தது .
மேரி சாவர்த் என்ற அவன் தூரத்து சொந்தக்கார பெண் தான் அவன் முதல் காதலி . அவள் இவனிடம் ஆயாசப்பட்டு ஒதுங்கியபோது பைரனின் பாடு பொருள் ஆகியதால் பல கவிதைகள் . பின் லேடி கரோலின் லாம்ப் என்ற காதலி . அவன் மணந்து கொண்ட அன்னாபெல்லா இவனுடன் வாழ மறுத்ததற்கு காரணம் பைரன் சொந்த தங்கையுடன் கொண்ட சரீர சம்பந்தம் . அவனுடைய Half –Sister அகஸ்தா லீ . இவளுக்கு ஒரு பெண் குழந்தையை பைரன் கொடுத்தான் . அன்னாபெல்லாவுக்கு ஒரு பெண்குழந்தை .
ஷெல்லியின் சகளைபாடியாக பைரன் ஆகியவன் . ஷெல்லி பெஞ்சாதி மேரி யின் சகோதரி (Step –sister) க்ளேர் கிளார்மன்ட் . இவளுக்கும் ஒரு பெண்குழந்தையை காதல் பரிசாக கொடுத்தான் பைரன் .

I lived, I loved, I quaffed ,like thee:
I died: Let earth my bones resign;

Fill up – thou canst not injure me;
The worm hath fouler lips than thine

-Byron

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.