Share

Mar 16, 2009

தலாக் தலாக் தலாக்

ஹரியானாவிலே முன்னாள் முதல்வர் பஜன்லால் மகன் சந்தர் மோகன் . இவரு ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வர். காங்கிரஸ் எம் எல் ஏ .

இந்தாளு முகம் பார்த்தீங்கன்னா 'இப்ப தான் விளக்கெண்ணை குடிச்சவன்மூஞ்சி ' மாதிரியே இருக்கும் ! போன தீபாவளியன்னைக்கு மனைவி சீமா , இரண்டு குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டு காணாமல் போயிட்டாரு .அப்ப இவரு ஹரியானாவின் துணை முதல்வர் .நாற்பது நாட்கள் சென்ற பின் டிசெம்பெர் மாதம் புது மாப்பிள்ளையா திரும்பி வந்தார் . கூட அந்த மாநில உதவி அட்வகேட் ஜெனரல் அனுராதா பாலி. இதான் புதுப்பொண்ணு . இப்ப இரண்டு பேரும் முசல்மான்களாக. அனுராதா பேரு FIZA! இந்த மந்திரி பேரு சந்த் முஹம்மத் . உடனே பஜன்லால் குடும்பம் இந்த ஆளை கைகழுவிடுச்சி. துணை முதல்வர் பதவியும் சந்த் முகமதுவிடமிருந்து பிடுங்கப்பட்டது .அனுராதா வகித்த கோர்ட் பதவியும் காலி .


மீண்டும் ஜனவரி இருபத்தெட்டாம் தேதி (அதாவது கொஞ்ச நாளிலேயே )பிசா என்ற அனுராதாவையும் அம்போ என்று விட்டு விட்டு காணாமல் போய்விட்டார் .

போன வெள்ளிக்கிழமை (march13தேதி) இரவு இங்கிலாந்துலே இருந்து அனுராதா பாலிக்கு ஒரு போன் . சந்த் முகமது தான் ."தலாக் . தலாக் . தலாக் " தொலைபேசியிலேயே விவாகரத்து . மனுஷன் ரொம்ப பொறுப்பானவர் ! கவனமும் உஷாரும் நிறைந்தவர் ! உடனே ,உடனே அனுராதா மொபைலுக்கு ஒரு எஸ் எம் எஸ் " தலாக் . தலாக் . தலாக் " .எஸ் எம் எஸ் மூலமும் விவாகரத்தை உறுதி செய்து பெருமிதமடைந்து விட்டார் .

இந்த போன் ,எஸ் எம் எஸ் தலாக் குறித்து இப்ப அனுராதா என்ற பிசா சட்டவல்லுனர்களையும் ,மௌலவி ,அஜரத்களையும் கலந்து ஆலோசித்துக்கொண்டு இருக்கிறார் . யா அல்லா !

6 comments:

  1. ஹ்ஹா ஹ்ஹா ஹ்ஹா

    ReplyDelete
  2. ங்கோத்தா! இதுவ‌ல்ல‌வோ Demo(n)crazy!

    ReplyDelete
  3. இதை பற்றி எந்த அரசியல் வியாதிகளும் கவலைப்படவே மாட்டார்கள். அவர்கள் ஒழுக்கம் எல்லாம் மேடையில் வசனம் பேசும் போது மட்டும் தான் . இதை கண்டித்து யாராவது ஒருவராவது பேசியிருப்பார்களா, அல்லது இதை பற்றி எனக்கு தெரிந்தவரை எந்த ஒரு மீடியாவில் கூட இதை வெளிப்படுத்தியதாக தெரியவில்லை

    ReplyDelete
  4. I guess this is not in islam. This people misusing the religion for his desire. He should bring it to the justice.

    ReplyDelete
  5. Dear writer,

    There should be 3 months gap in between each thalak.

    its not just u can say thalak thalak thalak and go with it.

    ReplyDelete
  6. A Muslim male is allowed three chances, that is to say, three pronouncements or acts of divorce on three different occasions provided that each divorce is pronounced during the time when the wife is in the period of purity (that is not in her menstrual time). A husband may divorce his wife once and let the Iddat (the period of waiting after divorce) pass. During the waiting period the two have the option of being reconciled. If however the waiting period passes without reconciliation, they stand fully divorced.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.