Share

Dec 27, 2008

சந்திராஷ்டமம்

இன்னைக்கு தினமலர்லே கருணாநிதி மீண்டும் தி மு க தலைவர் ஆகிற செய்தி பற்றி குறிப்பிடும் போது இன்றைய இருபத்தேழாம் தேதி காலை 9மணி முதல் 9.45மணி வரை மகர லக்னம் . அதனால் இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்து தலைவர் ஆகிற நிகழ்ச்சி நடைபெறுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்கள் .

இன்று முதல்வரின் ரிஷப ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதை அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறி விட்டார்களா ? அல்லது சந்திராஷ்டமத்திற்கு ஏதேனும் பரிகாரம் இருக்கிறதா ?

முதல்வரின் ராசிக்கு எட்டில் சந்திரன் இருக்கும் நிலையில் திமுக தலைவர் பதவி ஏற்பதால் அவருக்கும் கட்சிக்கும் ஏதேனும் ஊறு விளைந்திடகூடாதே என பதைபதைப்பு ஏற்பட்டு தவித்து ,தத்தளித்து , தக்காளி வித்து விட்டேன் !

.....

தலைவர் பதவி ஏற்கும்போது வேதனையுடன் ' திராவிட இயக்கம் துவங்கிய காலத்தில் அழுத்தமாக ,பிடிவாதமாக பகுத்தறிவை பின்பற்றினோம் . இப்போது தினமலர்காரர்கள் 'நாள் பார்த்து காரியம் பார்க்கிறோம்' என்று கிண்டல் செய்யும்படி ஆகிவிட்டதே ' என்று தன்னிரக்கத்தால் வருத்தப்பட்டிருக்கிறார்.

மஞ்சள் துண்டு , புட்டபர்த்தி காலில் தயாளு அம்மாள் விழுந்தது , குடும்பமே குலதெய்வம் துவங்கி பல தெய்வங்களை வணங்குவது எல்லாம் அவரை ரொம்ப உறுத்தி சங்கடப்படுத்துகிறது .

சரி எல்லோருக்கும் கஷ்டம் .கருணாநிதி கஷ்டம் வெளியே தெரிகிறது ....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.