Share

Nov 6, 2008

தேடல்

ஒவ்வொரு கர்நாடக சங்கீத கலைஞரும் அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் அதாரிட்டி .

மதுரை மணி அய்யர் எல்லா ராகமும் . என்றாலும் அந்த மோகனம் கீர்த்தனை :கபாலி ..

நாகஸ்வரம் டிஎன் ராஜரத்தினம் பிள்ளை க்கு " தோடி ராகம்

முசிறி சுப்ரமணிய ஐயர் ராகம் 'முகாரி ' -என்றைக்கு சிவக்ருபை வருமோ

செம்மங்குடி யின் பிரபல ராகம் கரஹரப்ரியா .

மதுரை சோமு வுக்கு "தோடி "

நாகஸ்வரம் காருகுறிச்சி அருணாச்சலம் "ஹிந்தோளம் "

இப்படி ஜி என் பால சுப்ரமணியத்துக்கு என்ன ராகம் தெரியுமா ? "ஷண்முக ப்ரியா"

இவருடைய இந்த ஷண்முகப்ரியா கிடைக்குமா என பல ஆண்டுகள் ,இருபது ஆண்டுகள் அலைந்திருக்கிறேன் . என்னிடம் அவருடைய ஆடியோ கேசெட் பல இருக்கிறது . ஆனால் ஷண்முகப்ரியா அவற்றில் கிடையாது .ஜி என் பி பாடிய ஷன்முகபிரியா கிடைக்கவே இல்லை !

செம்மங்குடியின் கரகர ப்ரியா வாவது ஒரு துக்கடா பாடல் கிடைத்தது .

தேடல் என்பது எவ்வளவு துயரம் !

புத்தகங்கள் கூட தேடலில் கிடைக்காத போது ஏற்படும் தவிப்பு .

க நா சு சொல்வார் "எல்லாமே ரொம்ப முக்கியம் தான் . ஆனா எதுவுமே அவ்வளவு முக்கியம் இல்லே "

இந்த வார்த்தைகளில் என் மனம் நிலைகொண்டு சாந்தியடைந்தது . இப்போதெல்லாம் ஏமாற்றங்களுக்கு பழகி விட்டது . ஒரு நிதானம் வந்து விட்டது .

3 comments:

  1. ஏமாற்றங்களுக்கு பழகிவிட்டது மனது. இருப்பது போதும் என்ற மனது வந்து விட்டது. ஆசைகளை சர்வ சாதாரணமாக கொலை செய்கிறோம்.
    எனக்கும் இப்படித்தான். ஆனால் இது நம் முன்னேற்றத்தை தடை படுத்தி விடுகிறது.

    கிணற்று தவளை வாழ்க்கையே பரவா இல்லை என்று முடிவு கட்டி விடுகிறோம்.

    குப்பன்_யாஹூ

    ReplyDelete
  2. Dear Rajanayaham,
    I am a regular reader of your blog.

    U can download shamugapriya of GNB from 1.http://sangeethamshare.org/parameshwar/Natarajan_Collections/GNB/03-GNB-RTP-Shanmughapriya-Kanchadayaladakshi.mp3

    2.http://sangeethamshare.org/murthy/044-Santhanam---Shanmukhapriya-RTP---31.12.2006/17-Santhanam-Vilayada-Shanmukhapriya-GNBalasubramanyam.mp3

    Thank you

    JK.Tyagarajan, Dubai

    ReplyDelete
  3. Tyagarajan jk !Thanks a lot!!
    It's a Serendipitious happy discovery!!!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.