Share

Nov 10, 2008

இந்திரா பார்த்தசாரதியின் தன்மானம்

புதுவையில் என் வீட்டிற்கு எதிர் வீட்டில் துணைவேந்தர் கி .வேங்கிட சுப்பிரமணியன் குடியிருந்தார் .அல்லது அவர் வீட்டுக்கு எதிர் வீட்டு மாடியில் நான்.


ஒரு நாள் துணைவேந்தர் வீட்டில் இருந்து வெளியே இருவருடன் வந்து சத்தமாக பேசிகொண்டிருந்தார் . நான் ஜன்னல் வழி பார்த்தேன் .கே பால சந்தரும் நடிகை வைஜயந்தி மாலாவும் . பாலச்சந்தர் ரொம்ப உற்சாகமாக பேசிகொண்டிருந்தார் .

பதினைந்து நிமிடம் வெளியே அவர்கள் நிற்க நேர்ந்தது .அவர்களின் கார் வந்த பின் இருவரும் சென்றார்கள் . தெருவில் பலரும் வீடுகளில் இருந்து வெளியே வந்து வேடிக்கை பார்க்கும்படி பாலச்சந்தரும் நடிகை வைஜயந்தி மாலாவும் காத்திருக்க வேண்டியிருந்தது .

மறு நாள் மாலை லாஸ் பேட்டை போய் கிராவை பார்த்த போது இந்த விஷயத்தை சொன்னேன் .

கிரா 'உங்களுக்கு விஷயமே தெரியாதா ?' ஆச்சரியமாக கேட்டார் .

' நாடகத்துறை இயக்குனர் இந்திரா பார்த்தசாரதி பல்கலை கழகத்தின் ' டீன் ' ஆகியுள்ளார் . அந்த பதவிக்கு அவரை அமர்த்த சில நடைமுறைகள் . அது சம்பந்தமாக அவருக்கு போன் செய்து துணைவேந்தர் சொன்னாராம் " உங்களை இன்டெர் வியூ செய்ய சினிமா இயக்குனர் கே . பாலசந்தரும் , அகில இந்திய நடிகை வைஜயந்தி மாலாவும் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள் . உடனே கிளம்பி வாருங்கள் . "

இந்திரா பார்த்த சாரதி என்ன பதில் சொன்னாராம் தெரியுமா ?

" கே பாலசந்தரும் நடிகை வைஜயந்தி மாலாவும் என்னை இன்டெர் வியூ செய்து தான் இந்த பதவி எனக்கு கிடைக்கும் என்றால் அந்த பதவியே எனக்கு வேண்டாம் ."

"நீங்கள் தான் பல்கலைக்கழக டீன் என்பது முடிவான விஷயம் .இது சும்மா ஒரு பார்மாலிடி ." துணை வேந்தர் இவரை சமாதான படுத்தியிருக்கிறார் .

இந்திரா பார்த்த சாரதி உறுதியாக வர மறுத்து விட்டாராம் . துணை வேந்தர் என்ன செய்வார் ? சினிமா பெருந்தலைகளான பாலசந்தரையும் வைஜயந்தி மாலாவையும் சமாளிக்க வேறு எதோ சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் .'

இந்திரா பார்த்த சாரதி பல்கலை கழக 'டீன் ' ஆகிய கதையின் பின் உள்ள சுவாரசியத்தை கிரா சொல்லி முடித்தார் .

வெங்கட் சுவாமிநாதன் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் சொன்னார்

"பாமரத்தனத்துக்கு கௌரவமான கலைபூச்சு தான் ஜெயகாந்தனும் ,கே பாலசந்தரும் "

ஒரு நாட்டுக்கு இந்திய தூதராக செல்லக்கூடிய அளவு தகுதி படைத்தவர் இந்திரா பார்த்த சாரதி . எந்த சமரசத்திற்கும் தன்னை ஆட்படுத்தி கொள்ளதாவர் . ஒரு மிக சிறந்த எழுத்தாளரை இன்டெர் வியூ செய்ய சினிமாக்காரனுக்கு - கே பாலசந்தருக்கு , நடிகை வைஜயந்தி மாலாவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது . இந்திரா பார்த்தசாரதியின் 'ஏசுவின் தோழர்கள் 'நாவல் ஒன்றின் முன் பாலசந்தரின் அத்தனை படங்களும் சேர்ந்தாலும் அற்பமானவை தான் .பல்கலை கழக நடைமுறைகள் எவ்வளவு கேலிகூத்தானது என்பதற்கு இது ஒரு உதாரணம் .

8 comments:

  1. என்ன கொடுமை ஆர்பிஆர் சார் இது?

    ReplyDelete
  2. வெங்கடசுப்பிரமண்யம் மீது ஆயிரம் குறை இருந்தாலும் அவர்தான் இ.பா,
    கி.ரா போன்றவர்களை அடையாளம்
    கண்டு பாண்டி பல்கலையில் பொருத்தமான பதவிகளில இடம் பெறச்செய்தார். இது தமிழ்நாட்டின்
    எந்தப் பல்கலையிலும் நடந்திருக்காது.
    இ.பா இன்னும் ஏன் பல்கலைகழக துணைவேந்தராகவில்லை.அவருக்கு தகுதியில்லையா?. தமிழ்நாட்டில்
    தகுதி,திறமையை விட ஆட்சியாளர்களின் அருட்கண்
    பார்வையே அதிகம் தேவை.

    ReplyDelete
  3. //ஒரு மிக சிறந்த எழுத்தாளரை இன்டெர் வியூ செய்ய சினிமாக்காரனுக்கு - கே பால சந்தருக்கு , நடிகை வைஜயந்தி மாலாவுக்கு என்ன யோக்யதை இருக்கிறது . // True.

    ReplyDelete
  4. Unfortunately till date I have not read any of Indira Parthasarathy's works. Can you guide me as to what novel to first start with ?

    ReplyDelete
  5. இ.பா.வின் வளையாத்தனத்துக்கு இன்னொரு உதாரணம். அவருக்கு கலைமாமணி அறிவித்தபோது, அவருக்கு மேலும் கீழுமிருந்த பெயர்களைப்பார்த்துவிட்டு, அந்தப்பட்டம் தனக்கு வேண்டாமென்று உதறியவர்.

    இந்தியாவிலேயே சாகித்ய அகாடெமி, சங்கீத நாடக அகாடெமி விருதுகளைப் பெற்ற முதல் இந்திய எழுத்தாளர். அவரது ‘கோழிகிண்டல்’ கையெழுத்தைப்பார்த்து,’உமக்கு லலித் கலா அகாடெமி விருதும் குடுக்கலாமே ஐயா, Modern Art மாதிரி ஒண்ணும் புரியாமெ இருக்கே!’ என்று கேலி செய்திருக்கிறேன். அவர் எழுதியதை என்னிடம் கொடுத்து, ‘நான் என்ன எழுதியிருக்கேன் பாத்து சொல்லுங்க’ என்று என்னிடம் கேட்டிருக்கிறார்.

    வெங்கடசுப்பிரமண்யம் க.நா.சு.வையும் இரு வருடங்களுக்கு விஸிட்டிங் ப்ரொபஸராக இருக்க வழி வகுத்தவர்.

    பாரதி மணி

    ReplyDelete
  6. I don't know if no one has told you this before. Please try to follow a structured punctuating style.
    For example: word. space word. As in, "It's over. But he continued" and not "It's over .But he continued."
    The same applies to commas, question marks, and all other punctuation marks. You don't have to publish this. I just felt that a simple punctuation problem shouldn't disturb your narratives' flow. Thanks.

    ReplyDelete
  7. Thank you Bharathi Mani Sir!

    Krishnan! You begin with Thanthira boomi, sudhandhira Boomi.
    Other important works of Indira Parthasarathi
    Helicopterkal keelae irangi vittana , Thiraikalukku appaal vendhu thanintha kaadukal, VaerPatru, Aesuvin thozharkal.

    ReplyDelete
  8. http://ninaivu.blogspot.ae/2009/05/blog-post.html

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.