Share

Nov 29, 2008

ஏ கருணாநிதி


'மாங்கல்யம் ' என்ற படத்தில்
ஏ கருணாநிதி தான் குளித்தலைக்கு செல்லவிருப்பதை வி.எம் ஏழுமலை என்ற நடிகரிடம் இரவு விடை பெறும்போது ஓட்டை இங்கிலீஷில் சொல்வார் :“Good Morning! I am going to ‘ the’ Kulithalai. Good Morning!”

குழந்தைத்தனமான காமடியன்! அந்த விடைத்த மூக்கு அவரது காமடிக்கு மிகவும் கைகொடுத்தது.

பெண் வேடமிட்டு அவர் வந்தால் கொனஷ்டைகள் பிரமாதமாக இருக்கும் .
கதாநாயகி படத்தில் பெண் வேடமிட்டு அவர் சொல்லும் " நாங்கல்லாம் ரொம்ப கௌரவமான குடும்பத்தை சேர்ந்த பொம்பளைங்க " கேட்கும்போதே சிரிப்பை நம்மால் அடக்க முடியாது .

வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்தில் பெண் வேடத்தில் அவர் மாட்டுவண்டி யோட்டும் சிவாஜிக்கு பின் உட்கார்ந்து செய்யும் கொனஷ்டைகள் !
அதே படத்தில்
"ஒற்றனாக நான் போகிறேன் அரசே " என்பார் . சிவாஜி " பொடியன் பொருத்தமானவன் "

வெள்ளையர் படையெடுத்து வருவதை தெரிவிக்கும்போது ' நான் எவ்வளவோ தடுத்து பார்த்தேன் .முடியவில்லை ' - ஏ கருணாநிதி பதட்டத்துடன் சொல்லும்போது வேடிக்கையாயிருக்கும் .

குழந்தை தனமான காமெடி செய்தவர் என்றாலும் 'பாலும் பழமும்' படத்தில் எம்ஜியார் - வி என் ஜானகி திருமணம் பற்றி அரசியல் பேசியவர் .
" ஜானகிக்காக ராமச்சந்திரன் வில்லை ஒடைக்கலயா ?"


மனோரமாவிடம் காதல் பேசிவிட்டு 'வரட்டுமா ' என்று வீட்டின் மேலே பார்ப்பார் .மனோரமா ' ஓடு புதுசா இப்பத்தான் மேலே போட்டுருக்கு . வாசல் வழியா போ ' என்பார் .

மதராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் கண்டக்டர் நாகேஷ் உடன் சேர்ந்து டிரைவர் ஏ கருணாநிதி அடிக்கும் லூட்டி ..
அதே கண்கள் படத்தில் மலையாளி சமையல்காரராக "யாரு செத்துபோயி " என்று திகிலுடன் கேட்பார் .
'ஆதி பராசக்தி ' படத்தில் ஒ . ஏ .கே .தேவரும் , ஏ .கருணாநிதியும் அசுரர்கள் .தேவர்களை சிறைப்பிடித்துவிடுவார்கள் . தேவகன்னிகைகளை பார்வையிடும்போது தேவர் ஜொள்ளு விட்டு சொல்வார் : தம்பி ! இந்த தேவ கன்னிகைகளை பார்த்தவுடன் தேவப்பயல்கள் மீது இரக்கம் வருகிறது ."
உடனே ஏ .கருணாநிதி அழுத்தமாக சொல்வார் : இயற்கை ! இயற்கை !

முத்து லக்ஷ்மி யுடன் ஜோடியாக இணைந்து நிறைய படங்கள் (கிட்டத்தட்ட நூறு படங்கள் ?அல்லது நூற்றுக்கும் மேல் )நடித்தவர்.

" மாமியா ஓட்டல் " என்ற பெயரில் கடைசி காலத்தில் உணவகம் நடத்தினார் .
எலும்புருக்கி நோயால் இறந்தார்.

.....................................................................

6 comments:

  1. Nice to read about the forgotten actors like A. Karunanidhi. Of the movies you had mentioned, I had seen only Kattabomman, and you are absolutely right - his body language was hilarious in a woman role!

    ReplyDelete
  2. மறக்க முடியுமா படத்தில் காகித ஓடம் கடலலை போலே என்ற பாடலுக்கு லீட் கொடுத்து நடித்திருப்பார்.. பிள்ளைகளை வீட்டில் இருந்து விரட்டித்தான் இந்தப் பாடலை பாட வைப்பார்..

    கடைசியாக பாலுமகேந்திராவின் திரைப்படம் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் பார்த்தேன். ஒய்.ஜி.மகேந்திரன், சுருளிராஜனுடன் நடித்திருந்தார்.

    அமெரிக்காவில் மகன் வீட்டில் இறந்தார் என்று வானொலி செய்தியில் கேட்ட ஞாபகம்.

    ReplyDelete
  3. Unmai Thamizhan!

    It was T.R. Ramachandran who died in America and not A.Karunaanithi.

    R.P.Rajanayahem

    ReplyDelete
  4. Please Note

    Unmaithamizhan pinnoottam
    is rejected from this " A.Karunanithi" pathivu

    ReplyDelete
  5. ராஜநாயஹம் சார்,

    சின்ன வயசில் ஒரு நாள் இரவு (1971-72 இருக்கும் ), நானும் அப்பாவும் காலாற பாண்டி பஜார், ராஜகுமாரி தியேட்டர் என்று நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்பா சொன்னார்: ' வாடா, ஹோட்டல்ல சாப்பிடலாம்'. நான் சொன்னேன்: ' அப்பா, ஏ. கருணாநிதி 'ஹோட்டல் மாமியா ' என்று ஒன்று இங்கேதான்பா எங்கேயோ நடத்தறார். இந்த வாரம் குமுதத்தில் பார்த்தேன்' . தேடிப் பிடித்துப் போனால் வாசலில் போர்டு போட்டிருக்கு: " கைம்மா உறுத்தல், ரஷ்ய உள்ளான் , காடை, கௌதாரி " என்று இன்னும் என்னென்னவோ! . அப்பா என்னை அடிக்காத குறைதான்! " ஏண்டா நாசமாப் போறவனே! பேரப் பார்த்தாலே தெரியல, மிலிடரி ஹோட்டல் என்று?". அப்புறம் ஒரு வழியாக கீதா கபேயோ ஏதோ ஒன்றில் மசால் தோசை சாப்பிட்டு விட்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்! ரஷ்ய உள்ளானை கபளீகரம் செய்யும் வாய்ப்பு பின்னாளில் கிடைக்காமலே போயிற்று! கெடுத்தார் அப்பா!

    நன்றி!

    சினிமா விரும்பி

    ReplyDelete
  6. ஓட்டல் மாமியா-ன்னு பேர் வெச்சாரா. ஆகா. என்ன ரசனை. என்ன வெள்ளந்தியான பேர். இவரு நடிச்சா சிரிப்பு மட்டுந்தான் வரும். மதராஸ் டு பாண்டிச்சேரியில் நாகஷ் இவருக்கு சேவிங் செஞ்சப்புறம் செய்யும் முகச்சேட்டைகள்.

    கட்டபொம்மன்ல பெண் வேடத்துல வரும் போது உண்மையிலேயே நாட்டுப்புறம் பெண் வந்துட்ட மாதிரிதான் இருக்கும்.

    அதென்ன படம்.. சிவாஜி பத்மினியோட வீட்ல சமையல்கார நாயரா வருவாரே. அதுலயும் நல்லா நடிச்சிருப்பாரு.

    ஏ.கருணாநிதியின் நகைச்சுவை நடிப்பு எப்போதும் இயல்பா இருக்கும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.