Share

Nov 24, 2008

நாகார்ஜுனன் ப்ளாகில் சட்டக்கல்லூரி மோதல் பற்றி உண்மையறியும் குழு அறிக்கை

சட்டக்கல்லூரி மோதல் ஏற்படுத்தியுள்ள மன உளைச்சல் பற்றி சொல்லி முடியாது . அந்த நிகழ்வு பற்றி ஊடகங்கள் செய்த சில்மிஷம் ,மொன்னையான தகவல்கள் , டெலிசெய்திகளின் பொறுப்பின்மை நெஞ்சை ரணமாக்கியது .
நாகார்ஜுனன் ப்ளாகில் உண்மைஅறியும் குழு அறிக்கை , எமது பார்வை , அதன் மீதான ஜமாலன் , ராஜன் குறை ,நாகார்ஜுனன் கருத்துக்கள் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அவசியம் படித்து பாருங்கள் .

nagarjunan.blogspot.com

1 comment:

  1. சட்ட கல்லூரிகளில் மட்டும் ஏன் இப்படி நடக்கின்றது? ஒரு ஐ ஐ எம் அல்லது அண்ணா பல்கலையில் இப்படி நடக்குமா? நடக்காது. ஏன் என்றால் அங்குள்ள மாணவர்களுக்கு மிகவும் நன்றாக தெரியும் இந்த அரசியல்வாதிகளால் நமக்கு எந்த பயனும் இல்லை என்று. அங்கு ஒரு அம்பேத்கர் பூஜை கிடையாது. தேவர் ஜெயந்தி கிடையாது. படிப்பு படிப்பு மட்டுமே. ஆனால் இங்கு நாம் என்ன செய்கிறோம்? மாணவர்களை சாதிவரியாக பிரிக்கின்றோம். தனிதனி விடுதிகள். இவைகள் எல்லாம் அங்கு இல்லை. சட்டம் ஒரு மிகப்பெரிய படிப்பு. அதனை சாக்கடை ஆகியதற்கு அனைத்து சாதி சங்கங்கள் மௌனம் காத்த ஆசிரியர்கள், கெடுத்த அரசியல்வாதிகள் எல்லோரும் பொறுப்பு. கிராமப்புற மாணவர்கள் மண்டல பொறியியல் கல்லூரியில் படிக்கவில்லையா? அங்கு எந்த சமுக விரோதியும் விடுதியில் வந்து தங்கமுடியாது. மாணவனை படிப்பு துரத்தும். ஒரு தேர்வில் பெயில் ஆனால் இன்போசிஸ் அல்லது HCL வேலை கிடையாது. GRE, GATE, CAT என்று ஓட வேண்டும். மருத்துவமும் அதேபோல்தான். இதில் சட்டம் மட்டும் எப்படி வித்தியாசப்படும்? கல்லூரி சரியில்லை. ஆசிரியர் இல்லை. முதல்வர் இல்லை. விடுதி உண்டு. சாதி உண்டு. சமூக விரோதிகள் துணை உண்டு. பிறகு மாணவர்கள் எப்படி இருப்பார்கள். இப்படித்தான் இருப்பார்கள். முதலில் சாதிவாரியான விடுதிகளை மூடுங்கள். கல்லூரிகள் முழு நேரம் நடக்கட்டும். மாணவர்களை மாணவர்களாக இருக்க விடுவோம். தேவரும் அம்பேத்கரும் என் நாட்டு தலைவர்களா இருக்கட்டும. என் சக மாணவனை அடிக்க காரணமாக வேண்டாம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.