Share

Nov 11, 2008

நகுலனின் ராமச்சந்திரன்

நகுலன் கவிதை ஒன்று .
"ராமச்சந்திரனா என்று கேட்டேன் .
ராமச்சந்திரன் தான் என்றார் .
எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை .
அவரும் சொல்லவில்லை ."
எழுத்தாளரின் எழுத்தாளர் நகுலன் !
தன்னை பார்க்க வருகிறவர்களிடம் " என்னுடைய ராமச்சந்திரன் கவிதை படித்திருக்கிறீர்களா ? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா ?" என்பார் .
உதட்டை பிதுக்கி இல்லை என்று சொல்வார் வந்தவர் ."நீங்களே சொல்லுங்களேன் "
நகுலன்வருத்தத்துடன் சொல்வார் " எனக்கும் புரியவில்லை . அவர் அதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா?சொல்லவே இல்லை !"
பல சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர் நகுலன் .
ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை ?
"நானும் திருமணம் செய்து கொண்டால் அம்மா அப்பாவை யார் பார்த்துக்கொள்வது " நகுலன் பதில் .
கவிஞர் திரிசடை இவரது சகோதரி .
" மரணத்தை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது . சாவுரதுன்னா எனக்கு ரொம்ப பயம் .."-நகுலன்
Literature…. Is the rediscovery of Childhood
- Georges Bataille

1 comment:

  1. நாயஹம்மா என்று கேட்டேன்
    நாயஹம் தான் என்றார்
    எந்த நாயஹம் என்று நானும் கேட்க வில்லை
    அவரும் பதிவேதும் போடுவதில்லை
    கடந்த சிலமணி நேரமாய்.

    பதிவுலகில் அவர்தான் hitlist டாமே?
    அனேகமாக அவர் பதில்
    "போடா வெண்ண" யாக தான் இருக்கும்!

    கவிதை படித்த விளைவு!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.