Share

Nov 7, 2008

மனித மிருக நாகரீகம் ,பண்பாடு ,கலாச்சாரம்

'நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம் ' கட்டுரையில் உம்பர்டோ ஈகோ 'நம் வாழ்க்கையை மாற்றியமைத்த கண்டுபிடிப்புகள் சிக்கலான எந்திரங்களை சார்ந்து உள்ளன என்று நாம் நம்புகிறோம் . பீன்ஸ் இல்லாவிட்டால் ஐரோப்பிய மக்கள் தொகை சில நூற்றாண்டுகளில் இரண்டு மடங்கு ஆகியிருக்காது .உழைக்கும் மக்களால் அதிக புரோட்டினை உண்ண முடிந்தது. உடலுரம் பெற்று நீண்ட நாட்கள் வாழ்ந்து ,அதிக குழந்தைகள் பெற்று ஒரு கண்டத்தின் மக்கள் தொகையை மறு பெருக்கம் செய்தார்கள் .' என்று ஒரு மாற்று பார்வையை முன் வைத்தார் .

கௌதம சித்தார்த்தனின்' உன்னதம் 'ஆறாவது இதழில் உம்பர்டோ ஈகோ வின் " புதியதொரு பூனையின் வரைவடிவம்" என்ற சிறுகதை மொழிபெயர்ப்பு வெளியாகியிருந்தது . அதில் ஒரு பூனை . துயரங்கள் மிகுந்த அதன் வாழ்க்கை , ஏற்ற தாழ்வுகள் ,ஆச்சரியமான எதிர்பாராத நிகழ்வுகள் . அந்த பூனை தன் தாயை புனர்ந்துள்ளது . இன்னொரு எதிர்பாராத நிகழ்வு . தன் தந்தையை ஒரு முறை பெரிய ஒரு இறைச்சி துண்டுக்கான போராட்டத்தில் கொலை செய்து விட நேர்ந்துள்ளது .

ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை ' நூலில் மனித வரலாறு துவங்கும் காலத்தில் தாயை புணரும் மகன் , தந்தையுடன் உடல் உறவு கொள்ளும் மகள் - இப்படி சாங்கிருத்தியாயன் புனைந்திருக்கிறார் .

Venus in Fursநாவலில் Masoch சொல்கிறார் " சகலவித நாகரீகங்களையும் ,முன்னேற்றம் ,உன்னத மாற்றம் ,வளர்ச்சி களையும் மீறி ,இயற்கையால் படைக்கப்பட்ட அதே நிலையில் தான் பெண் இன்னமும் இருக்கிறாள் "

மனிதம் - மிருகம்

"மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்து பேசுவதை விட கேலி கூத்து கிடையாது . ஏனெனில் சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாக க்கருதுகின்றன ." இது ஜி .நாக ராஜன் பொன்மொழி !

5 comments:

  1. வணக்கம் ராஜநாயகம்,
    சாருவினுடைய வலைப்பூ வழியாக தங்களைக் கண்டடைந்தேன். உங்கள் பெயரைப் பார்த்தவுடன் 'இசுலாமியர்' என்று நினைத்தேன்.ஏனென்றால் உங்களது பெயரும் ஓர் இசுலாமியக் காப்பியத்தின் பெயரும் ஒன்றே.Umberto uco வின் பீன்ஸ் பற்றிய கட்டுரையின் ஆங்கில வடிவம் எதிலச உள்ளது? நெட்டில் கிடைக்குமா?

    ReplyDelete
  2. //சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாக க்கருதுகின்றன//

    ரசித்தேன்!

    ReplyDelete
  3. "கௌதம சித்தார்த்தனின்' உன்னதம் 'ஆறாவது இதழில் உம்பர்டோ ஈகோ வின் " புதியதொரு பூனையின் வரைவடிவம்" என்ற சிறுகதை மொழிபெயர்ப்பு வெளியாகியிருந்தது". Can you please shed light on where I can find Tamil trasnlated works of Umberto Eco ?

    ReplyDelete
  4. Jean ,Krishnan and Kutti Pisaasu
    I am a Hindu Agnostic.

    R.Sivakumar's Tamil translation of Umberto Eco's essay in Kalachchuvadu 28 jan-mar 2000

    You please check for the English essays in LandMark bookstall in Chennai.

    don't fail to read his novel in English "The name of the Rose" and "Foucoult's Pendulam"

    you can get the Movie DvDThe name of the Rose every where.
    Sean Connery has acted as William Baskerwille.Don't miss this movie.

    I don't think Umberto Eco's fictions are translated in Tamil.

    generally I read Eco in English.

    WHen You get fed up in searching ,please read my previous article "thedal"

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.