Share

Nov 6, 2008

இது தான் சினிமா !

தேவர்' தெய்வச்செயல் 'படம் மேஜர் சுந்தர் ராஜனை கதாநாயகனாக்கி எடுத்தார் .கொஞ்ச நாளில் அதை தூசி தட்டி ஹிந்தியில் அப்போது உச்சத்தில் இருந்த ராஜேஷ் கண்ணா கதாநாயகனாக 'ஹாத்தி மேரே சாத்தி 'யாக்கி படம் அகில இந்தியாவிலும் சூப்பெர் ஹிட் . அதையே மீண்டும் தமிழில் எம்ஜியாரை வைத்து' நல்ல நேரம் ' வியாபார ரீதியில் நல்ல லாபம் .பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் படங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை தான் . இதில் மேஜர் -ராஜேஷ் கண்ணா -எம்ஜியார் மூவருமே எவ்வளவு மாறுபட்டவர்கள் .மூவரும் ஒரே கதையின் நாயகர்கள் !
நாகிரெட்டி 'எங்க வீட்டு பிள்ளை' எம்ஜியாரை வைத்து தமிழில் , ராமாராவ் தெலுங்கில் , ஹிந்தியில்' ராம் அவ்ர் ஷியாம் ' - திலிப் குமார் கதாநாயகன் . தமிழ் தெலுங்கு போல் ஹிந்தியில் ஹிட் . கொஞ்ச வருடம் கழித்து முக்கிய ரெட்டை கதாபாத்திரங்களை பெண்ணாக்கி ஹேமா மாலினி நடிக்க ' சீதா அவ்ர் கீதா' ஹிந்தியில் சூப்பர் ஹிட் . உடனே தமிழில் வாணி-ராணி என்று எடுக்கப்பட்டது .
'சீதா அவ்ர் கீதா ' ஹிட் ஆகியிருந்த நேரம் . மற்றொரு ஹிந்தி படத்தில் ஹேமா மாலினி , ஜிதேந்திரா , அமிதாப் பச்சன் நடித்துகொண்டிருந்தார்கள் . கிளைமாக்ஸ் கடைசி சண்டைக்காக ஹேமா மாலினியை மோசமானவர்களிடம் இருந்து காப்பாற்ற அமிதாப்பும் ஜிதேந்திராவும் கடுமையாக ரிகர்சல் பார்த்து விட்டு செட்டுக்கு போனார்கள் . அங்கே இவர்களை கட்டிப்போட்டார் இயக்குனர் . ஹேமா மாலினி மோசமானவர்களிடம் "கட்டி புரண்டு,கட்டி கட்டி புரண்டுபுரண்டு "கடுமையாக சண்டையிட்டு அமிதாப்பையும் ஜிதேந்திராவையும் காப்பாற்றினார் . கதை மாற்றப்பட்டுவிட்டது .சீதா அவ்ர் கீதா வில் ஹேமா மாலினி சண்டை மக்களுக்கு பிடித்து விட்டது . அதனால் இந்த படத்தில் கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ஹேமா சண்டை !
ஆங்கிரி எங் மேன் அமிதாப் பச்சன் மனம் அன்று என்ன பாடு பட்டிருக்கும் .
வழக்கமா கதாநாயகன் தான் கிளைமாக்ஸ் காட்சியில் "தும்பிக்கையை தரையிலே ஊனி ,நாலு காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமா சுத்துவான் !"

3 comments:

  1. என்ன தலைவா 'ஆனாவ delete பண்ணிட்டிங்க ..... last paravin குறும்பை ரசித்தேன் .... எத்தனை பேருக்கு பேருக்கு புரிந்திருக்கும்னு தெரில..

    ReplyDelete
  2. Every post of yours reveals a different facet of yours. Reading your blog is a great experience. The knowledge we gain by reading each post is immense. We owe you a lot for such selfless service. Thank you sir. Keep going.

    N.Ramakrishnan

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.