Share

Nov 27, 2008

An Anecdote in “The Outsider”


ஆல்பெர் காம்யுவின்" The Outsider” நாவலில் மெர்சோ சிறையில் செய்தித்தாளில் ஒரு செய்தியை படிக்கிறான் .



"செகொஷ்லோவாகியாவில் ஒரு கிராமம் . அங்கிருந்து ஒரு வாலிபன் பிழைப்பு தேடி வெளியூர் கிளம்புகிறான் .கிராமத்தில் அவன் தாயாரும் தங்கையும் இருக்கிறார்கள் . அங்கே ஒரு சத்திரத்தை நடத்திகொண்டிருக்கிறார்கள்.
இவன் இருபத்தைந்து வருடம் கழித்து நிறைய சம்பாதித்துக்கொண்டு ,தன் மனைவி ,குழந்தையுடன் கிராமத்துக்கு திரும்பி வருகிறான் . தன்தாய்க்கும் தங்கைக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணி வேறொரு சத்திரத்தில் தன் மனைவி குழந்தையை தங்க வைத்து விட்டு தன் குடும்ப சத்திரத்திற்கு வருகை தருகிறான் . அங்கே அறையொன்றில் தங்குகிறான் . அவன் தாயாருக்கும் தங்கைக்கும் அவனை அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை . மாலை விருந்தில் இவன் அவர்கள் பார்க்கும்படியாக தன்னிடம் உள்ள பெருந்தொகை யை தற்செயலாக காட்டுவது போல் காட்டுகிறான் . இவனுடைய தாயாரும் தங்கையும் அன்றிரவு அந்த பணத்தை கைப்பற்ற வேண்டி இவனை கோடரி யால் அடித்துகொன்று விடுகிறார்கள் . பிணத்தை ஆற்றில் போட்டு விடுகிறார்கள் .
மறு நாள் அங்கே இவனை தேடி அவன் மனைவி குழந்தையுடன் வருகிறாள் . நேற்று வந்து தங்கியவன் உன் பிள்ளை தான் என்று அந்த தாயிடம் சந்தோசமாக சொல்கிறாள் .

அந்த தாய் தூக்கு போட்டு இறக்கிறாள் . தங்கை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள் ."

6 comments:

  1. பின்னர் 1943-இல் இக்குறிப்பு காம்யூவால் “Cross Purpose" (ஃப்ரென்ச்சில் “Le Malentendu") என்ற ஓரங்க நாடகமாக எழுதப்பட்டது.

    ReplyDelete
  2. இதே கதையைத் தழுவி, உல்டா செய்து (கொலை செய்த தங்கைக்கு பதில் தம்பி, கொலைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு பதில் தந்தை) தமிழில் சமீபத்தில் 1981-ல் “ஒரு கொலை ராகம்” என்னும் நாடகம் நடத்தப்பட்டது.

    அதில் குழந்தை 12 வயது பெண்ணாகக் காட்டப்பட்டாள். அந்த ரோலில் நடித்த அந்த சுட்டிப் பெண் பிற்காலத்தில் இளவரசி என்னும் பெயரில் நடிகையாக வந்தாள். சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம் ஆகிய படங்களிலும் நடித்தாள். நாடகத்தில் அவளது அன்னையாக நடித்தவர் உண்மை வாழ்க்கையிலும் அவர் அன்னைதான் என்று கேட்டதாக ஞாபகம்.

    நாடகம் முடிந்ததும் கிரீன் ரூமுக்கு சென்று நாடகத்தின் வில்லன் கம் டைரக்டரிடம் ஆல்பர்ட் காம்யூவின் நாடகத்தைப் பற்றிக் கூற அது பற்றி தான் கேள்விப்படவேயில்லை என என்னிடம் சாதித்து விட்டார். ஆனால் அந்த நாடகத்தை பிரெஞ்சு மூலத்தில் படித்த இந்த டோண்டு ராகவன் அவர் சொன்னதை அப்போதும் நம்பவில்லை, இப்போது இப்பின்னூட்டத்தை எழுதும்போதும் நம்பவில்லை.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. THANK YOU ANONYMOUS!

    Dondu Ragavan sir,
    Interesting!

    ReplyDelete
  4. இதே கதை, ராஜஸ்தான்/குஜராத் பகுதி நாடோடிக்களத்தில் வைத்து விடுதி பெற்றோரே பல ஆண்டுகள் கழித்துவரும் தங்கள் மகனைக் கொல்வதாக ஒரு ஹிந்திப்படம் பார்த்திருக்கிறேன். பெயர்பெற்ற இயக்குநர் ஒருவர் எடுத்த படம். எழுபது-எண்பதுகளில் வந்தது. இதில் என்ன சுவாரசியமென்றால் விடுதி நடத்துவோர் இப்படித் தங்க வருவோர் பலரைக் கொன்றவர்கள் என்பதுதான்.

    அப்போதே காம்யூவின் கதையின் தாக்கம் இருந்திருக்கலாம் என்று விமர்சனம் வந்ததும் நினைவிருக்கிறது. பிறகு நானும் Le malentendu நாடகத்தை வாசித்தேன். அண்மையில் ஃப்ரெஞ்சிலும் வாசித்தேன். ஆனால், அந்தப்படத்தின், இயக்குநரின் பெயர்களை நினைவில் இன்னமும் தேடுகிறேன்..! எழுபதுகளின் இறுதி, எண்பதுகளின் தொடக்கத்தில் வந்திருக்கலாம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.